யாசகராகவிருந்து பொலிவூட் பாடகியான ரானு மொண்டால்

0 135

மேற்கு வங்­கா­ளத்தின் ரணகாத் ரயில் நிலை­யத்தில் யாச­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த ரானு மொண்டால் எனும் பெண் பாடல் பாடும் காட்சி அடங்­கிய வீடியோ இணைத்தில் வெளி­யாகி வைர­லா­கி­யது.

அதை­ய­டுத்து ரானு மொண்டால் பிரபலமானார். ஹிமேஷ் ரேஷா­மியா தயா­ரித்து இசை­மைத்து கதா­நா­ய­க­னாக நடிக்கும் ‘ஹெப்பி ஹார்டி அன்ட் ஹீர்’ பொலிவூட் படத்தில் பாட­லொன்­றையும் ரானு மொண்டால் பாடியுள்ளார்.

மும்­பையில் நேற்­று­முன்­தினம் நடந்த இப்­ப­டத்தின் ஊக்­கு­விப்பு நிகழ்­வொன்றில் ஹிமே­ஷுடன் ரானு மொண்டால் காணப்படுகிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!