ஜெயலலிதா தொடர்பான திரைப்படத்துக்கு இந்தியிலும் தலைவி எனப் பெயர்

0 104

தமி­ழக முன்னாள் முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவின் வாழ்க்கை வர­லாற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தலைவி படத்­துக்கு இந்­தி­யிலும் தலைவி என பெய­ரிடத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­ப­டத்தில் பிர­தான வேடத்தில் நடிக்கும் கங்­கணா ரணாவத் விடுத்த கோரிக்­கையை ஏற்று, இந்திப் பதிப்­புக்கும் தலைவி என்றே பெய­ரிட்­டுள்­ளனர்.

விஜய் இயக்கும் இப்­படம் மறைந்த தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தாவின் வாழ்க்கை வர­லாற்றைப் பின்­ன­ணி­யாகக் கொண்ட பட­மாகும்.

இதில் ஜெய­ல­லி­தா­வாக நடிக்­க­வுள்ளார் கங்­கணா ரணாவத்.

இந்தப் படத்­துக்­கா­கவே தமிழ், பர­த­நாட்­டியம் கற்று வரு­கிறார் கங்­கணா ரணவத் இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்­பு­க­ளுக்கு தலைவி என்றும், இந்திப் பதிப்­புக்கு ஜெயா என்று தலைப்­பிட்டு இருந்­தது படக்­குழு.

ஆனால், தமிழ், தெலுங்கு மொழி­களில் இருக்கும் தலைவி என்ற தலைப்பே இந்­தி­யிலும் இருக்க வேண்டும். அப்­போ­துதான் மக்­க­ளுக்குப் புரியும் என படக்­கு­ழு­வி­ன­ரிடம் கங்­கணா ரணாவத் கூறினார்.

மேலும், ஹொலிவுட் படங்­களும் இந்­தி­யாவில் அதே பெயரில் வெளி­யாகும் போது, நாம் ஏன் மொழிக்கு மொழி பெயரை மாற்ற வேண்டும் எனவும் கங்­கணா ரணவத் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

கங்­க­ணாவின் கேள்வி சரி­யாக இருந்­ததால் இந்­தி­யிலும் தலைவி என்ற பெய­ரையே வைத்­து­விட்­டது படக்­குழு.

தற்­போது அனைத்து மொழி­க­ளிலும் தலைவி என்ற பெய­ரி­லேயே இந்தப் படம் உரு­வா­க­வுள்­ளது. தலைவி படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் நவம்பரில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!