வானதி எனும் நான் (சிறுகதை-மதுபாரதி)

0 243

–மது பாராதி-

வர­வேற்­ப­றையில் அமர்ந்து பத்­தி­ரிகை படித்துக் கொண்­டி­ருக்­கிறேன். முற்­றத்து தென்னை மரத்தின் ஓலையில் உட்­கார்ந்து கீச்­சிட்டுக் கொண்­டி­ருந்த ஜோடிக் கிளிகள் என் கவ­னத்தைத் தம்பால் திருப்­பி­யி­ருந்­தன.

ஒன்­றல்ல, இரண்டு ஜோடிக் கிளிகள்… இரண்டு தென்­னோ­லை­களில் எதிரும் புதி­ரு­மாக அமர்ந்து…. ஓ!!! அவை எழுப்­பு­கின்ற அந்த ஒலிதான் அவற்றின் மொழியா……? அப்­படி கிளி­களின் மொழிதான் கீச்­சி­டுதல் என்றால், அவை தமக்குள் என்ன பேசிக் கொண்­டி­ருக்­கின்­றன….? அல்­லது எந்­த­வி­த­மான உணர்வை வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன?

பத்­தி­ரிகைச் செய்­தியின் மீதி­ருந்த எனது கவனம் மெல்­லவே சிதறிப் போய்…. கிளி­களின் மொழி தொடர்­பான ஆராய்ச்­சியில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கையில் அதற்கும் தடை வந்தாற் போல அம்மா தொலை­பே­சியில் யாரு­டனோ பேசிக் கொண்­டி­ருந்த விட­யங்கள் என் செவிப்­ப­றையில் மோதி எனது கவ­னத்தை திசை திருப்­பி­விட்­டன.

அம்­மா­விற்கு மெது­வாகப் பேச வராது ரக­சி­ய­மாகப் பேச வேண்­டிய விட­யத்தைக் கூட சத்­தமாப் பேசித்தான் அவ­ளுக்குப் பழக்கம். போனில் ஒரு­வ­ருடன் பேசு­வ­தாக இருந்­தாலும் சரி, நேரில் ஒரு­வ­ருடன் பேசு­வ­தாக இருந்­தாலும் சரி அம்­மாவின் குரல் கணீ­ரென்று தான் ஒலிக்கும் அது அவளின் பிறவிக் குணம்.

இப்­போது அம்மா தொலை­பே­சியில் யாரு­டனோ பேசிக் கொண்­டி­ருக்­கிறாள். அவ­ளது பேச்சில் அடி­ப­டு­வது எனது பெயர்…. ஓ……. நடக்­காத எனது திரு­ம­ணத்­திற்­காக வரன் தேடிக் கொண்­டி­ருக்­கி­றாளா அவள்? அப்­ப­டி­யானால் இந்த நபர் அவள் தேடும் எத்­த­னை­யா­வது வரன்?

எனக்கு இப்­போது வயது முப்­பத்­தாறு. இரு­பத்­தாறு வயதில் பல்­க­லைக்­க­ழ­கத்தை விட்டு பட்­டத்­துடன் புறப்­பட்­டவள் நான். இரு­பத்து நான்கு வயதில் வாங்க வேண்­டிய பட்டம் அடிக்­கடி இடம்­பெற்ற பல்­க­லைக்­க­ழக மூடு விழாக்­களைத் தாண்டி அப்­ப­டியும் இப்­ப­டியு­மாக இழு­பட்டு இரண்டு வரு­டங்­களை வீணாக விழுங்­கிய பின்னர்… ஒரு­வாறு பட்­டப்­ப­டிப்பை முடித்­தி­ருந்தேன்.

படிப்பு முடிந்த கையோடு நல்ல வேலை­காத்­தி­ருந்­தது எனக்கு. மன­துக்குப் பிடித்த வேலை கணி­ச­மான சம்­பளம்….. எனது கன­வு­களும் கூட இறக்கை கட்டிப் பறந்­தன. ஒரு சுப­யோக சுப­தி­னத்தில் எனது திரு­மணப் பேச்­சு­வார்த்­தையைத் தொடங்கி வைத்தாள் அம்மா.

சாதி, மதம், குலம், கோத்­திரம் எல்லாம் பார்த்து அம்மா தேர்ந்­தெ­டுத்த அந்த முதல் வரனை எனக்குப் பிடிக்­க­வில்லை என்ற கார­ணத்தால் தட்டிக் கழித்­தவள் நான்…..
“முதல் கோணல் முற்றும் கோணல்” என்றாற் போல ஏனோ என் கல்­யாணப் பேச்­சு­வார்த்­தைகள் முடி­வின்றி… நீண்டு கொண்டே போய்… பத்து வரு­டங்கள் பறந்­தோடி விட்­டன.

இப்­போது திரு­மணம் செய்­வதில் எனக்­கி­ருந்த ஈடு­பாடும் மெல்ல மெல்லக் குறைந்­துபோய் அப்­படி ஒரு வாழ்க்கை எனக்­கில்லை என்ற முடி­விற்கே நான் வந்து விட்டேன். ஆனாலும் அம்மா மட்டும் தனது முயற்­சியில் தளர்­வ­தாக இல்லை. உற­வி­னர்கள், நண்­பர்கள், தெரிந்­த­வர்கள் மூல­மாக வரன் தேடும் படலம் முடி­வ­டைந்த நிலையில் திரு­மண “புரோக்­கர்­களை” மாத்­திரம் முழு­தாக நம்பி தன் முயற்­சியை விசா­லப்­ப­டுத்திக் கெண்­டி­ருந்தாள்.

அப்­பாவோ இவ்­வி­ட­யத்தில் தலை­யி­டாத ஒரு­வ­ராகத் தன்னை இனங்­காட்டிக் கொண்­டாலும் அம்மா அவரை இப்­பேச்சு­ வார்த்­தை­களில் உள்­நு­ழைப்­பதில் வெற்றி கண்டாள்.

கல்­யாணம் என்­பது எனது வாழ்க்கைப் பய­ணத்தின் இறுதி இலக்கு இல்லை என்­பதில் நம்­பிக்கை கொண்­டி­ருந்­த­வ­ளான நானோ இந்தப் பத்து வருட கால இடை­வெ­ளியில் என் கல்வித் தகை­மையைக் கூட்டும் பணியில் கவ­னத்தைக் குவித்­தி­ருந்தேன்.

அது என் கல்­யாணம் கைகூடி வரு­வதில் முட்­டுக்­கட்டை­யாக அமையப் போகி­றது என்ற உண்­மையை அப்­போது நான் அறிந்­தி­ருக்­க­வில்லை.  வங்­கி­யொன்றில் பதவி நிலை உத்­தி­யோ­கத்­த­ராகப் பணி­பு­ரிந்து வரு­கின்றேன். எனது அடுத்த இலக்கு வங்கி முகா­மை­யாளர் பதவி என்­றான நிலையில் திரு­மணம் இனி எனக்குச் சரிப்­பட்டு வராது என்ற முடி­வுக்கு நான் வந்­தி­ருந்த நிலையில் இதோ இன்­னொரு கல்­யாணப் பேச்­சு­வார்த்தை….

அம்­மா­விற்கும் வேலை­யில்லை புரோக்­கர்­க­ளுக்கும் இதை­விட்டால் வரு­மா­ன­மில்லை….. பத்­தி­ரி­கையை மடித்து உரிய இடத்தில் வைத்­ததும் எழுந்தேன் இரவுச் சமை­ய­லுக்கு உதவி செய்யும் நோக்கில்…… சமை­ய­ல­றையில் அம்­மாவின் அரவம் “பிரஸர் குக்­கரில்” இட்லி வெந்து கொண்­டி­ருந்­தது. சாம்பார் தயா­ரிப்­ப­தற்­காக காய்­க­றி­களை நறுக்கிக் கொண்­டி­ருந்தாள் அம்மா.

சட்னி அரைக்கும் நோக்கில் தேங்­காயை உடைத்து துருவ ஆரம்­பித்தேன்.
“வானதி, உனக்கு ஒரு சம்­பந்தம் வந்­தி­ருக்கு” பதில் ஏதும் பேசத்­தோன்­ற­வில்லை எனக்கு.
“மாப்­பிள்ளை கொழும்­பில ‘எக்­க­வுண்­ட­னாக’ வேலை பார்க்­கி­றாராம். நம்­மட சாதிதான் வயசு தான் கொஞ்சம் கூட. அது தான் யோசி­னையா கிடக்கு”
“எத்­தின வயசு?”

“நாற்­பது”“பாதி வாழ்க்கை முடிஞ்­சி­ருச்சு. இது ரெண்­டாந்­தா­ரமா என்ன?”“என்ன நக்­கலா? ஏதோ உனக்கு மட்டும் வயசு கொறச்சல் மாதிரி பேசுற?” “வேண்­டாம்மா எனக்கு கல்­யா­ணமே வேணாம். முப்­பத்­தாறு வய­சுக்கு அப்­புறம் எனக்கு ஒரு கல்­யாணம் நடந்து… அதுக்­கப்­புறம் பிள்­ளைகள் பிறந்து அது­க­ளுக்குப் பதி­னைஞ்சு வய­சா­கி­றப்போ நான் கிழவி ஆகி­டுவன் பாட்­டி­யோட திரி­யி­ற­மா­திரி பிள்­ளை­க­ளுக்கு பீல் ஆகும்…”

“இப்­பெல்லாம் கல்­யாணம் சின்ன வய­சி­லயா நடக்­குது…? எண்­டைக்கு பொம்­பிள பிள்­ளைகள் படிக்க வெளிக்­கிட்டு உத்­தி­யோ­கத்­துக்­கெண்டு கிளம்­பிச்­சு­த­களோ அண்­டைக்கே கல்­யாணம் வயசு தள்­ளிப்­போக ஆரம்­பிச்­சிட்­டுது…”

“அதுக்­காக படிக்­கா­மல இருந்தா நல்­லாவா இருக்கும்? உங்­க­ளுக்கு ஒவ்­வொண்­டுக்கும் ஒரு காரணம் சொல்­லணும் வேணாம்மா…. எனக்கு கல்­யாணம் பேசி மினக்­கெ­டா­தீங்க நான் இப்­ப­டியே இருந்­திட்டுப் போறன் இந்த வாழ்க்கை எனக்குத் திருப்­தியா இருக்கு”

“ஆனா எங்­க­ளுக்குத் திருப்­தியா இல்­லையே உன்ன ஒரு­வன்ர கையில புடிச்சிக் குடுத்­தாத்தான் எங்­க­ளுக்கு நிம்­மதி வரும்”

“இப்ப இப்­படி சொல்­லு­றீங்க. அப்­புறம் புள்ள குட்­டிகள் ஆனப்­புறம் தென்ன கரைச்சல் எண்டு புலம்பப் போறீங்க”
“அது பொறகு வாற விசயம் பொலம்­பு­றம்மா இல்ல கொஞ்­சு­றமா எண்­டத பொறுத்­தி­ருந்து பாரு.”

“சரிம்மா நீங்க என்­ன­வாச்சும் பண்­ணுங்க நீங்க சொல்­லுற மாப்­பிள்­ளைக்கு நான் கழுத்த நீட்­டுறன்”
“அப்­படி வா வழிக்கு”
அந்த சம்­பா­ஷணை அத்­துடன் நிறைவு பெற்­றது. இரவுச் சாப்­பாட்டை முடித்­ததும் படுக்­கைக்குப் போனேன்.

“ஒவ்­வொரு மனத்­திலும் ஒரு சோகக் கதை உண்டு. அது கதை­யாக வெளிப்­ப­டாத வரை உல­குக்குக் கி­டைக்க வேண்­டிய சுவா­ரஷ்­ய­மான அனு­ப­வ­மொன்று நட்­ட­மாகி விடு­கி­றது” என்று எப்­போதோ படித்த ஞாபகம்.
எனது மனதில் இருக்கும் அந்த சோகக் கதையை உங்­களின் சுவா­ரஷ்­யத்­திற்­காக சொல்­ல­லாமா? வேண்­டாமா?
“வானதி” எனும் நான் ஒன்றும் பேர­ழகி அல்­லத்தான்.

ஆனாலும் சாமுத்­தி­ரிக்கா லட்­ச­ணப்­படி சுமா­ரான அழகி பாட­சாலைக் காலத்தில் மகளிர் பாட­சாலை ஒன்­றில தான் கற்று வந்தேன்.

அதனால் என் அழகு குறித்த கர்­வமோ, அந்த அழகால் ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்­சி­னை­களோ அறி­யா­த­வளாய் இருந்தேன்.

உயர்­தரம் படிக்­கையில் மேல­திக வகுப்­பு­க­ளுக்­கென்று கிளம்பிப் போன­போது தான் பிரச்­சி­னைகள் துளிர்­விட ஆரம்­பித்­தன. சம­வ­யது கொண்ட இளை­ஞர்­க­ளோடு முகங் கொடுக்க வேண்­டிய ஒரு சந்­தர்ப்பம்…

அந்­நாட்­களில் என்­னோடு பேசிப் பழகும் சந்­தர்ப்­பங்­க­ளுக்­காக ஒரு இளைஞர் பட்­டாளம் காத்துக் கிடக்­கி­றது என்ற உணர்வு எனக்குள் தொற்று நோயாகத் தொற்றிக் கொண்­டது.

இதனால் படிப்பின் மீதி­ருந்த எனது கவனம் மெல்ல மெல்லச் சிதைய ஆரம்­பித்­தது… நான்… என்னை அலங்­க­ரிக்க அதிக நேரம் கண்­ணாடி முன்னே நிற்க ஆரம்­பித்தேன்.  அம்மா எனது மாற்­றத்தை கூடிய சீக்­கி­ரமே கண்டு கொண்டாள். அதை அவள் அப்­பா­விடம் கண், மூக்கு, காது வைத்து சொல்­லி­யி­ருக்க வேண்டும்….

ஒரு நாள் மாலை அம்மா கோயி­லுக்­கென்று கிளம்பிப் போன பிற்­பாடு அப்பா என்னைத் தேடிக் கொண்டு எனது அறைக்குள் வந்தார்.
“மகள் உன்­னோட கொஞ்சம் பேசணும்”
“சொல்­லுங்­கப்பா”
“உன்ர படிப்­பெல்லாம் எப்­படிப் போகுது?”
“ஏதோ போகுது”
“நல்லாப் போகு­­தெண்டு சொல்ல மாட்­டியா?
“சொல்­லலாம் தான். ஆனா நிலைமை அப்­படி இல்­லையே…”
“ஓ.எல். எக்­சா­மில நல்ல ரிசால்ட் எடுத்த பிள்ளை இப்­படிச் சொல்­ல­லாமா?”
பதில் சொல்ல முடி­ய­வில்லை என்னால்.
“வானதி உன்மேல் நாங்க நிறைய நம்­பிக்கை வச்­சி­ருக்­கிறம். அந்த நம்­பிக்­கையைக் காப்­பாற்ற வேண்­டி­யது உன்ர பொறுப்பு”
“சரிப்பா என்­னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்­யிறன்”
“மற்­றது இன்­னொரு விசயம்…”
“சொல்­லுங்­கப்பா”
“இந்த வய­சில பெடி­யங்­க­ளின்ற தொல்லை இருக்­கத்தான் செய்யும். காதல் கீதல் எண்டு கவனம் சித­றித்­தெண்டால் படிப்பு பாழா­யிடும். அதனால் கொஞ்சம் கவ­னமாய் இரு”
“சரிப்பா”
“நீ எங்­க­ளுக்­கெண்டு இருக்­கிற ஒரே­யொரு பிள்ளை. எங்­கட உச்­சத்­தத்தான் நாங்க உனக்குச் செய்­யிறம். பதி­லுக்கு நீயும் உன்ர உச்­சத்த செய்து எங்­கட கௌர­வத்தைக் காப்­பாத்­தணும்”
“சரிப்பா”
ஒரு பேச்­சுக்­குத்தான் அப்­பா­விடம் வாக்குக் கொடுத்தேன். என்­றாலும் அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்­காக பெரிதும் சிர­மப்­பட்டேன் என்ற உண்­மையை இங்கு பதிவு செய்­துதான் ஆகணும். அன்­றி­ரவு ….

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!