உலக சினிமா வசூல் பட்டியலில் ‘அவதார்’ படத்தின் சாதனையை முறியடித்தது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’

'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' வெற்றியே அவதார் அடுத்த பாகங்களுக்கான நம்பிக்கையை கொடுத்தது என்கிறார் ஜேம்ஸ் கெமரூன்

0 156

உலகில் மிக அதிக தொகையை வசூ­லித்த படங்­களின் பட்­டி­யலில் ‘அவேஞ்சர்ஸ் என்ட்கேம்’ படம் முத­லிடம் பெற்­றுள்­ளது. இதற்­குமுன் ‘அவதார்’ திரைப்­படம் முத­லி­டத்தில் இருந்­தது.

 

இந்­நி­லையில், அவதார்’ படத்தின் அடுத்த பாகங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு தனக்கு ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படம் நம்­பிக்கை கொடுத்­தது என இயக்­குநர் ஜேம்ஸ் கெமரூன் கூறி­யுள்ளார்.

ஜேம்ஸ் கெமருன் இயக்­கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளி­யான அவதார் திரைப்­படம் 278.8 கோடி அமெ­ரிக்க டொலர்­களை வசூ­லித்­திருந்தது.

இந்­நி­லையில் அந்­தனி ருஸோ, ஜோ ருஸோ சகோ­த­ரர்­களின் இயக்­கத்தில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி வெளி­யான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படம், குறு­கிய காலத்­துக்குள் 279.6 கோடி அமெ­ரிக்க டொலர்­களை வசூ­லித்து முத­லி­டத்தைப் பெற்­றுள்­ளது.

ஏற்­கெ­னவே 2 ஆவது இடத்தில் இருந்த ஜேம்ஸ் கெம­ரூனின் டைட்­டானிக் திரைப்­ப­டத்தின் வசூலை சில வாரங்­க­ளி­லேயே ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முறி­ய­டித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

வசூல் பட்­டி­யலில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்­படம் முத­லிடம் பெற்­ற­மைக்கு ‘அவதார்’ இயக்­குநர் ஜேம்ஸ் கெமரூன் தனது ட்விட்டர் பக்­கத்தில் வாழ்த்து தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் ஜேம்ஸ் கெமரூன் அளித் செவ்­வி­யொன்றில், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் வெற்­றியே அவதார் படத்தின் பாகங்­களைத் தயா­ரிப்­ப­தற்­கான நம்­பிக்­கையைக் கொடுத்தது எனக் கூறி­யுள்­ளார்.
இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில்,

”மக்கள் இன்னும் தியேட்­டர்­க­ளுக்குச் சென்று கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்கு ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ ஒரு மிகப்­பெ­ரிய சாட்சி. ‘அவதார்’ படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்­களைத் தொடங்க நான் மிகவும் பயந்து கொண்­டி­ருந்தேன். மார்க்கெட் நிலை முன்பு போல இல்லை,

மக்­களும் முன்னர் போன்று ஓர் இருட்டு அறையில் முன்பின் தெரி­யா­த­வர்­க­ளோடு அமர்ந்து ஆர்­வ­மாகப் படம் பார்க்­க­மாட்­டார்கள் என்று எண்­ணினேன். ஆனால் ‘அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்’ எனக்கு மிகுந்த நம்­பிக்­கையைக் கொடுத்­தி­ருக்­கி­றது.

ஜேம்ஸ் கெமரூன்

 

ஆனால், அது­போன்ற ஒரு வெற்­றியை ‘அவதார்’ இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் கொடுக்­குமா என்பது சந்­தே­கம்தான். ஆனாலும் நாங்கள் முயற்சி செய்­கிறோம். அது நடக்­கலாம் அல்­லது நடக்­கா­மலும் போகலாம். ஆனாலும் அந்த வெற்றி சாத்­தி­யமே என்று இப்­போது புரிந்­தி­ருக்­கி­றது எனத் தெரி­வித்துள்ளார்.

‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம் 2021 ஆம் ஆண்டு டிசெம்­பரில் வெளி­யா­க­வுள்­ளது. அப்­ப­டத்தின் மூன்றாம் பாகம் 2023 டிசம்பரிலும், நான்காம் பாகம் 2024 டிசம்பரிலும், ஐந்தாம் பாகம் 2027 டிசம்பரிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!