மெல்பேர்ன் கிண்ண குதிரையோட்டத்தில் டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி; மிருக உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

0 153

அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடை­பெ­ற­வுள்ள மெல் பேர்ன் கிண்ண குதி­ரை­யோட்டப் போட்­டி­க­ளின்­போது பாடகி டெய்லர் ஸ்விப்ட் இசை நிகழ்ச்சி நடத்­த­வுள்ளார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், இப்­போட்­டி­க­ளின்­போது டெய்லர் ஸ்விப்ட் பாட­வுள்­ள­மைக்கு பலர் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளனர்.

27 வய­தான டெய்லர் ஸ்விப்ட், கடந்த ஒரு வருட காலத்தில் உலகில் அதிக ஊதியம் பெற்ற பாட­கி­யாக விளங்­கு­கிறார்.

இந்­நி­லையில், எதிர்­வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள மெல்பேர்ன் கிண்ண போட்­டி­க­ளின்­போது அவர் பாடுவார் என அறி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, மிருக உரிமை ஆர்­வ­லர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளனர்.

‘பந்­தயக் குதி­ரைகள் குரூ­ர­மாக கொல்­லப்­ப­டு­வதால் குதி­ரை­யோட்­டங்­க­ளுக்கு பலர் எதிர்ப்புத் தெரி­விக்­கின்­றனர்.

பொழுது போக்­குக்­கா­கவும், சூதாட்ட இலா­பத்­துக்­கா­கவும் குதி­ரைகள் கொல்­லப்­ப­டுகின்றன எனவே மெல்பேர்ன் கிண்ண குதி­ரை­யோட்­டத்­தின்­போது டெய்லர் ஸ்விப்ட் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது’ என மிருக உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!