காஷ்மீரில் AK-47 துப்பாக்கிகளுடன் மூவர் கைது!

0 274

காஷ்மீரில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாத இயக்கத்துடன் மூவர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு லஷ்கர்- ஈ-தொய்பா, ஜெய்ஷ்- இ-முஹம்த் முதலான இயக்கங்களின் தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 50 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வந்துள்ளனர் என இந்திய புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்னர்.

                                                                            AFP-PHOTO-Kathua-Police

200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் காத்திருப்பதாக கூறப்படுவதால் இந்திய இராணுவம் உஷார் படுத்தப்பட்டு காஷ்மீரில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரின்; ஜம்மு- பதான் கோர்ட் நெடுஞ்சாலையில், இன்று  காலை லொறி ஒன்றை சோதனையிட்டபோது அதற்குள் 6 ஏ.கே. ரக துப்பாக்கிகள் காணப்பட்டதாக காஷ்மீர் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) மகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!