அமைச்சர் கபீர் ஹாஸிமின் இணைப்புச் செயலாளர் கொலை முயற்சி விவகாரம்: மில்ஹான் அடையாளம் காணப்பட்டார்!

0 667

                                                                                                                   (எம்.எப்.எம்.பஸீர்)

               மொஹம்மட் மில்ஹான்

அமைச்சர் கபீர் ஹாஸிமின்  இணைப்புச் செயலர்களில் ஒருவரான மொஹம்மட் ராபிக் மொஹம்மட் தஸ்லீம் என்பவரை, மாவனெல்லை – தனாகம பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்ய முயன்ற விவகாரத்தில், பிரதான சந்தேக நபராக சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட , பயங்கரவாதி ஸஹ்ரான் குழுவின் ஆயுதப் பிரிவு பிரதனியாக கருதப்படும் மொஹம்மட் மில்ஹான் சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மொஹம்மட்  தஸ்லீம் மீது கடந்த மார்ச் 9 ஆம் திகதி அதிகாலை  நடத்தப்பட்ட துப்பககிச் சூட்டில் அவர் படு காயமடைந்தார். இந் நிலையில்  அது குறித்து சி.ஐ.டி. விசேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில்,  உயிர்த்த ஞாயிறு தாககுதலின் பின்னர் அக்கொலை முயற்சியின் மர்மங்கள் துலக்கப்பட்டன.

அதன்படி இந்த கொலை முயற்சி தொடர்பில், பிரதான சந்தேக நபர்களாக மூவரை அடையாளம் கண்ட சி.ஐ.டி., அந்த மூவரையும் நேற்று (12) மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்  செய்து அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியது.

இதன்போது இந்த கொலை முயற்சி சம்பவத்துக்கு தலைமை வகித்ததாக அடையாளம் காணப்ப்ட்டுள்ள பயங்கர்வாதி சஹ்ரான் குழுவின் ஆயுதப் பிரிவு பிரதனியாக கருதபப்டும் மொஹம்மட் மில்ஹான், சஹ்ரானின் சாரதியான கபூர் மாமா எனபப்டும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை ஆகிய இருவரை சாட்சியாளர்கள் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!