கஞ்சிபானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்கும் விளக்கமறியல்!

0 194

                                                                                                                 (எம்.எப்.எம்.பஸீர்)

கஞ்சிபானை இம்ரான்

காலி – ரத்கம பொலிஸ் பிரிவில் உள்ள பூஸா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக உறுப்பினர் கஞ்சிபானை இம்ரானுக்கு, பகல் உணவுடன் இரு தொலைபேசிகள், இரு மின்னேற்றிகள் மற்றும் 15 அடி நீளமான வயர் கோர்ட் ஆகியவற்றை வழங்க முற்பட்டபோது கைதான, கஞ்சிபானை இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட 6 பேரையும் இம்மாதம் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க காலி நீதிவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டது.

குறித்த ஆறு பேரும் காலி பிரதான நீதிவான் ஹர்ஷன கெக்குணவெல முன்னிலையில் ஆஜர் செய்யப்ப்ட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் ஆறு பேரையும் ரத்கம பொலிஸ் நிலையக் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தம்மிக நாகஹவத்த மற்றும் சார்ஜன்ட் தேவசிங்க ஆகியோர் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!