பிரபல நடிகர் போன்று பேஸ்புக்கில் அறிமுகமாகி பெண்களை ஏமாற்றிய இளைஞன் கைது

கைத்தொலைபேசியிலிருந்து 7,000க்கும் அதிகமான பெண்களின் படங்கள் சிக்கின!

0 100

(ஹனபி எம்.தாஸீம்)

பிர­ப­ல­மான நடிகர் ஒரு­வரைப் போல் பேஸ்­புக்கில் அறி­மு­க­மாகி புதி­தாக தயா­ரிக்­கப்­படும் திரைப்­ப­டத்­துக்­காக 17 வய­துக்கும் 30 வய­துக்கும் இடைப்­பட்ட வய­து­டைய பெண்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வ­தாக விளம்­பரம் செய்து பெண்­களின் புகைப்­ப­டங்­க­ளுடன் நிர்­வா­ண­மான புகைப்­ப­டங்­களைப் பெற்று பின்னர் அவர்­களை அச்­சு­றுத்தி பணம் பெற முயற்­சித்­த­தாக கூறப்­படும் 23 வய­து­டைய இளைஞர் ஒரு­வரை கைது செய்­த­தாக கிரி­பத்­கொடை பொலிஸார் தெரி­வித்­தனர்.

மேலும் குறித்த இளை­ஞரின் கைய­டக்கத் தொலை­பே­சியில் பெண்­களின் மற்றும் பாட­சாலை மாண­வி­களின் புகைப்­ப­டங்கள் உட்­பட பெண்­களின் மறை­வி­டங்கள் கொண்ட புகைப்­ப­டங்­க­ளு­மாக 7,000 க்கும் அதி­க­மான படங்கள் காணப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

நாட்டில் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் பெண்கள் உட்­பட பாட­சாலை மாண­வி­களும் இவ்­வி­ளம்­ப­ரத்­துக்கு தமது விருப்­பத்தைத் தெரி­வித்து இதில் சிக்­கி­யுள்­ள­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.

குறித்த இளைஞர் தனது கைய­டக்கத் தொலை­பே­சியில் குறுஞ் செய்தி (எஸ்­எம்எஸ்) அனுப்பி பெண்­களை அச்­சு­றுத்­தி­யுள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.

கிரி­பத்­கொடை பொலி­ஸா­ருக்கு கிடைத்த முறைப்­பாட்­டை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர விசா­ர­ணை­யை­ய­டுத்தே இது தொடர்­பான விட­யங்கள் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. இவ­ரது விளம்­ப­ரத்­துக்கு விருப்பம் தெரி­விக்கும் பெண்­க­ளுக்கு முதலில் தமது பெயர், முக­வரி, வயது மற்றும் பாட­சாலை விப­ரங்­களை எஸ்­எம்எஸ் மூல­மாக அனுப்பி வைக்­கு­மாறு அறி­வித்து அவை அனுப்பி வைக்­கப்­பட்ட பின்னர் குறித்த இளை­ஞரால் திரைப்­பட இயக்­குனர் என்று கூறிக்­கொள்ளும் நப­ரொ­ருவர் இப் பெண்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு இத்­தி­ரைப்­பட இயக்­கு­னரின் தொலை­பேசி இலக்­கத்­தையும் பெண்­க­ளுக்கு கொடுத்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதற்­கி­ணங்க பெண்­க­ளு­டைய கைய­டக்கத் தொலை­பேசி வட்ஸ்அப் மூல­மாக முதலில் பத்து சாதா­ரண புகைப்­ப­டங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்டு இரண்­டா­வ­தாக பத்து “ஹொட் ” புகைப்­ப­டங்கள் தரு­விக்­கப்­பட்டு மூன்­றா­வ­தாக 25 “பிகினி” புகைப்­ப­டங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்னர் உடம்பின் இர­க­சிய உறுப்­புக்­களை வீடியோ செய்து அனுப்­பி­வைக்­கு­மாறு கூறி இவை­களை தரு­வித்­துள்­ள­தாக பொலிஸார் கூறினர்.

பின்னர் இப்­பு­கைப்­ப­டங்­களை தேவைக்­கேற்ப தொகுத்து தயா­ரிப்­ப­தற்கு ஒன்­ற­ரை­இ­லட்சம் ரூபா செல­வா­கி­யுள்­ள­தாகக் கூறி ஐம்­ப­தா­யிரம் ரூபாவை தமக்கு அனுப்பி வைக்­கு­மாறு குறித்த இளைஞர் பெண்­க­ளுக்கு அறி­வித்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இப்­பெ­ரு­ம­ளவு தொகையை தரு­வ­தற்கு தம்­மிடம் பணம் இல்லை என்று பெண்கள் கூறும் பட்­சத்தில் பணம் தர முடி­யா­விட்டால் தம்மை தனி­யாக வந்து சந்­தித்து ஏதா­வ­தொன்றை தரு­மாறும் இல்­லா­விட்டால் குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு இப் புகைப்­ப­டங்­களை காட்­டு­வ­தாக பெண்­களை இந்த இளைஞர் பய­மு­றுத்­தி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இவ்­வி­ளம்­ப­ரத்­துக்கு 13,14 மற்றும் 15 வய­து­டைய பாட­சாலை மாண­வி­களும் சிக்கி ஏமாந்­துள்­ள­தா­கவும் பொலிஸார் கூறினர். சந்­தேக நப­ரான இவ் இளைஞர் கட­வத்தைப் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரென்றும் தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில் புரி­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இது தொடர்­பாக களனி உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரொஷான் ராஜ­பக்­க்ஷவின் மேற்­பார்­வையில் கிரி­பத்­கொடை பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.கே.பீ.டி சுப­சிங்ஹ ,குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் டபிள்யு.எம்.ஏ சந்­த­நுவன் , சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்­ப­தி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் சுகந்தி மற்றும் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஜயலத் (73251) ஆகியோர் மேல­திக விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!