கைதியை காதலித்து கரம்பிடித்த யுவதி சிறைக்குள் தனிக் கூண்டு

0 165

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவதி ஒருவர் 16 வயதில் தான் சந்­தித்த நபர் 23 வரு­டங்கள் தண்­டனை பெற்று சிறை சென்­ற­போதும் கடிதம் மூலம் காதலை வளர்த்து அவரை திரு­மணம் செய்­துள்ளார்.

2006 ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் நினா முதன்­மு­றை­யாக தனது காதல் கண­வ­ரான மைக்­கேலை ஒரு பார்க்­கிங்கில் சந்­தித்தார். அப்­போது மைக்­கே­லுக்கு 17 வயது. நினா­வுக்கு 16 வயது.

சில வாரங்­க­ளி­லேயே ஆயுதம் ஏந்தி கொள்­ளை­ய­டித்த வழக்கில் மைக்கேல் கைதாகி விட்டார்.

கொள்ளைக் கூட்­டத்தில் 17 வயது சிறுவன் என்ற அடை­மொ­ழி­யோடு அமெ­ரிக்க பத்­தி­ரி­கை­களில் புகைப்­ப­டத்­துடன் மைக்கேல் தொடர்­பான செய்­திகள் வெளியா­கின.

வழக்கை விசா­ரித்த நீதி­மன்றம் மைக்­கே­லுக்கு 23 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை வழங்­கி­யது.

மைக்­கேலை காத­லித்த நினா அவர் சிறை செல்­வ­தற்கு முன்பே தொடர்ந்து கடிதம் எழு­து­கிறேன் என உறுதி அளித்­து­விட்டார்.

முதல் 6 ஆண்­டுகள் இவர்­க­ளுக்கு இடை­யே­யான காதல் கடிதம் மூலம் மட்­டுமே வளர்ந்­துள்­ளது.

2012 -ம் ஆண்டு சிறையில் இரு­வரும் சந்­தித்­தனர். அதன்பின் சந்­திப்­புகள் அடிக்­கடி நடந்­து­வந்­தன.

இந்­நி­லையில் மைக்கேல் (30) தனது திரு­மண விருப்­பத்தை தெரி­வித்­துள்ளார். நினாவும் (29) சம்­ம­தித்தார்.

6 வருட காத்­தி­ருப்­புக்கு பின் சட்­டப்­படி இரு­வரும் திரு­மணம் செய்து கொண்­டனர்.

தம்­ப­தியர் மாதத்­துக்கு 48 மணி நேரங்கள் வரை பார்த்­துக்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்­டது.

இவர்­க­ளுக்­காக சிறை வளா­கத்தில் அனைத்து வச­தி­களும் கொண்ட தனி வீடு ஒதுக்­கப்­பட்­டிருந்தது. கண­வரின் வருகை குறித்து பேசி­யுள்ள நினா ஹோப்லெர், மைக்கேல் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார்.

விடு­தலை பெற்று சுதந்­திர மனி­த­னாக அவர் எடுத்து வைக்கும் முதல் அடியை ஆவ­லோடு எதிர்­நோக்கி உள்ளேன். மைக்கேல் சிரித்­த­படி எனது வீட்டு வாசலைத் திறக்கும் காட்சிகள் மனதில் நிழலாடுகிறது. அந்த விலைமதிப்பற்ற தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!