நீர் அருந்த குளத்துக்குள் இறங்கிய யானை சேற்றில் சிக்கியதால் காட்டுக்குள் செல்ல முடியாத நிலைமை!

வன ஜீவராசிகள் அதிகாரிகள் வந்தபோது தானாக முயற்சித்து வெளியேறிச் சென்றது!

0 103

(எஸ்.றொசே­ரியன் லெம்பேட்)

மாந்தை மேற்கு பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்ட பரப்புக் கடந்தான் கிரா­மத்தில் உள்ள குளத்­துக்கு நீர் அருந்­து­வ­தற்­காக வந்த நோய்­வாய்ப்­பட்ட யானை ஒன்று மீண்டும் காட்­டுக்குள் திரும்பிச் செல்ல முடி­யாத நிலையில் சேற்றில் சிக்கிக் காணப்­பட்ட நிலையில் சுய­மா­கவே முயற்­சித்து குளத்­தி­லி­ருந்து வெளி­யேறிச் சென்­றுள்­ளது.

 

மன்னார் மாவட்­டத்தில் நிலவும் கடும் வரட்சி கார­ண­மாக காட்டில் உள்ள மிரு­கங்கள் நீர் குடிப்­ப­தற்­காக அலை­மோதும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யி­லேயே பரப்­புக்­க­டந்தான் காட்டில் உள்ள யானை ஒன்று நீர் குடிப்­ப­தற்­காக நேற்றுக் காலை பரப்­புக்­க­டந்தான் கிரா­மத்தில் உள்ள குளம் ஒன்றை நாடி வந்­துள்­ளது. எனினும் குறித்த யானை காட்­டுக்குள் திரும்பிச் செல்ல முடி­யாது உடல் நோய் வாய்ப்­பட்ட நிலையில் குறித்த குளப் பகு­தியில் நேற்று பகல் வரையும் காணப்­பட்­டது.

இது தொடர்பில் கிராம மக்கள் உட­ன­டி­யாக கிராம அலு­வ­ல­கரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்ற நிலையில் கிராம அலு­வ­லகர் அடம்பன் பொலிஸ், வன ஜீவ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் அங்கு வந்தபோது அந்த யானை சுயமாக முயற்சித்து குளத்திலிருந்த வெளியேறியது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!