தோனியின் ஓய்வு வெறும் வதந்தி –மனைவி சாக்‌ஷி தோனி

0 36

எம்.எஸ். தோனி ஓய்வு பெற­வுள்­ள­தாக கூறப்­ப­டு­வது வதந்தி என அவரின் மனைவி சாக்‌ஷி தோனி தெரி­வித்­துள்ளார்.

இந்­திய அணித் தலைவர் விராத் கோஹ்லி தனது டுவிட்டர் பக்­கத்தில் “என்னால் மறக்க முடி­யாத போட்டி” என்று குறிப்­பிட்டு தோனி­யுடன் இணைந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக 2016 உலகக் கிண்ண கால் இறு­தியில் விளை­யா­டிய ஆட்­டத்தை நினைவு கூர்ந்து இருந்தார். அத்­துடன் ஸ்­பெசல் நைட்’ எனவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

விராத் கோஹ்­லியின் டுவீட்டை வைத்து, டோனி ஓய்வு பெறலாம் என்ற செய்தி வைர­லாகப் பர­வி­யது. அவர் இரவு 7 மணிக்கு பத்­தி­ரி­கை­யா­ளர்­களை சந்­திக்­கிறார் என்றும் செய்தி வெளி­யா­னது.

இதற்­கி­டையில் தென் ஆபி­ரிக்க தொட­ருக்­கான இந்­திய டெஸ்ட் அணி அறி­விக்­கப்­ப­டும்­போது, தேர்­வுக்­குழு தலை­வ­ரான எம்­எஸ்கே பிரசாத், அப்­படி எந்த தக­வலும் இல்லை என்று விளக்கம் அளித்தார். இந்­நி­லையில் தோனியின் மனைவி  சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் அதெல்லாம் வதந்திகள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!