சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. கழகம் சம்பியன்

0 45

(ரீ.கே.றஹ்­மத்­துல்லா )

அக்­க­ரைப்­பற்று றஹீ­மியா விளை­யாட்டுக் கழ­கத்தின் 13ஆவது வருட நிறை­வினை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட மின்­னொளி மென்­பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்­டியில் சம்­மாந்­துறை எஸ்.எஸ்.சி. கழகம் சம்­பியன் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.

68 அணிகள் கலந்து கொண்ட அணிக்கு எண்மர் கொண்ட இச்­சுற்றுப் போட்­டியின் இறுதி ஆட்டம் அக்­க­ரை­பப்­றறு அதா­உல்லா மைதா­னத்தில் அண்­மையில் நடை­பெற்­றது. அப் போட்­டியில் அட்­டா­ளைச்­சேனை தைக்­கா­நகர் எவடொப் கழ­கத்தை, சம்­மாந்­துறை எஸ்.எஸ்.சி. கழகம் வெற்­றி­கொண்­டது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த எவடொப் கழகம் 5 ஓவர்­களில் 3 விக்­கெட்­களை இழந்து 45 ஓட்­டங்­களைப் பெற்­றது.

46 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு நிதா­னத்­துடன் துடுப்­பெ­டுத்­தா­டிய சம்­மாந்­துறை எஸ்.எஸ்.சி கழகம் 4.3 ஓவர்­களில் வெற்றி இலக்கை அடைந்து சம்­பியன் கிண்­ணத்தை சுவீ­க­ரித்துக் கொண்­டது.

சம்­பியன் அணிக்கு 30 ஆயிரம் ரூபாவும் இரண்­டா­மி­டத்தைப் பெற்ற அணிக்கு 20 ஆயிரம் ரூபாவும் பணப்­ப­ரி­சாக வழங்­கப்­பட்­டன. இறுதி ஆட்­ட­நா­யகன், தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் எஸ்.எஸ்.சி அணி வீரர் எம்.சிப்றாக் வென்றெடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!