தேசிய விளையாட்டு விழா கெரம் போட்டிகளில் மேல் மாகாணம் சம்பியன், வடக்குக்கு 3 பதக்கங்கள்

0 99

விளை­யாட்­டுத்­துறை அமைச்சும் விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்தித் திணைக்­க­ளமும் நடத்தும் 45ஆவது தேசிய விளை­யாட்டு விழா­வுக்­கான கெரம் போட்­டி­களில் மேல் மாகாணம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரி­வு­க­ளிலும் ஒட்­டு­மொத்த சம்­பி­ய­னா­கி­யது.

 

ஆண்கள், பெண்கள் ஆகிய இரண்டு பிரி­வு­க­ளுக்­கு­மான ஒற்­றையர் மற்றும் இரட்­டையர் போட்­டிகள், இரு பாலா­ருக்­கு­மான அணி நிலை போட்­டிகள் ஆகிய அனைத்­திலும் வெற்­றி­யீட்டி ஆறு தங்கப் பதக்­கங்­க­ளையும் மேல் மாகாணம் சுவீ­க­ரித்­தது.

இப் போட்­டி­களில் வட மாகா­ணத்­துக்கு ஒரு வெள்ளிப் பதக்­கமும் 2 வெண்­கலப் பதக்­கங்­களும் கிடைத்­தன.
மேல் மாகா­ணத்தின் நிஷான்த பெர்­னாண்டோ அதி சிறந்த கெரம் வீர­ரா­கவும் ஜோசப் ரொஷிட்டா அதி சிறந்த வீராங்­க­னை­யா­கவும் தெரி­வா­கினர்.

பதுளை, பொது நூலக மண்­ட­பத்தில் கடந்த வார இறு­தியில் நடை­பெற்ற இப் போட்­டி­களில் ஆண்கள் ஒற்­றையர் பிரிவில் நிஷான் பெர்­னாண்டோ (மேல் மாகாணம்) தங்கப் பதக்­கத்­தையும் அனாஸ் அஹ்மத் (ஊவா மாகாணம்) வெள்ளிப் பதக்­கத்­தையும் அஞ்­சுள குமார (வடமேல் மாகாணம்) வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்­றனர்.

பெண்கள் ஒற்­றையர் பிரிவில் ஜோசப் ரொஷிட்டா (மேல் மாகாணம்) தங்கப் பதக்­கத்­தையும் மது­வன்தி குண­தாச (சப்­ர­க­முவ மாகாணம்) வெள்ளிப் பதக்­கத்­தையும் கே. கேசா­ஜினி (வட மாகாணம்) வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்­றனர்.

ஆண்கள் இரட்­டையர் பிரிவில் ஷஹீத் ஹில்மி, ஹசித்த அநு­ருத்த (மேற்கு), ஜோசப் டிலான், என். வீஜே­சிங்க (வட மேற்கு), எஸ். சேனாதி, எம். முபீஸ் (மத்தி) ஆகிய ஜோடி­யினர் முறையே தங்கம், வெள்ளி, வெண்­கலப் பதக்­கங்­களை வென்­றனர்.

பெண்கள் இரட்­டையர் பிரிவில் எம். டில்­ஷானி, டி. நொமாயா (மேற்கு), ஈ. திசாந்­தினி, ஆர். பவ­தா­ரணி (வடக்கு), எவ். அர்­ஷன, ஆர். செவ்­வந்தி (ஊவா) ஆகிய ஜோடி­யினர் முறையே தங்கம், வெள்ளி, வெண்­கலப் பதக்­கங்­களை வென்­றனர்.

அணி­நிலை போட்­டி­களில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரி­வு­களில் மேல் மாகாணம் தங்கப் பதக்­கங்­களை சுவீ­க­ரித்­தது. ஆண்கள் பிரிவில் ஊவா­வுக்கு வெள்ளிப் பதக்­கமும் மத்­திய மாகா­ணத்­துக்கு வெண்­கலப் பதக்­கமும் கிடைத்­தன.

பெண்கள் பிரிவில் சப்­பி­ர­க­மு­வ­வுக்கு வெள்ளிப் பதக்­கமும் வடக்­குக்கு வெண்­கலப் பதக்­கமும் கிடைத்தன.
வடக்கு மாகாண அணியில் கே. கேசாஜனி, ஏ. திசாந்தினி, ஆர். பவதாரணி, எஸ். சதுர்ஷிகா, எல். துசாஞ்சினி ஆகியோர் இடம்பெற்றனர். (என்.வீ.ஏ.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!