தென் ஆபிரிக்காவுடனான உலக டெஸ்ட் தொடர் இந்திய குழாத்தில் அறிமுக வீரர் ஷுப்மான் கில்

0 28

தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள இரண்டு போட்­டிகள் கொண்ட ஐ.சி.சி. உலக டெஸ்ட் கிரிக்கெட் தொட­ருக்­கான இந்­திய கிரிக்கெட் குழாத்தில் அறி­முக வீரர் ஷுப்மான் கில் பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

கே. எல். ராகுல் பிர­கா­சிக்கத் தவ­றி­யதால் அவ­ருக்குப் பத­லாக ஷுப்மான் கில்லை குழாத்தில் இணைத்­துள்­ள­தாக இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை தெரி­வித்­தது.

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக அண்­மையில் நடை­பெற்ற இரண்டு போட்­டி­களைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 44, 38, 13, 6 ஆகிய எண்­ணிக்­கை­க­ளையே நான்கு இன்­னிங்ஸ்­களிலும் ராகுல் பெற்றார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களில் பிர­கா­சித்­து­வரும் கில் 14 முதல்­தரப் போட்­டி­களில் ஓர் இரட்டைச் சதம் அடங்­க­லாக 4 சதங்கள், 8 அரைச் சதங்­க­ளுடன் 1,443 ஓட்­டங்­களைக் குவித்­துள்ளார்.

தென் ஆபி­ரிக்­கா­வு­ட­னான தொடரில் பெரும்­பாலும் மயான்க் அகர்­வா­லுடன் ரோஹித் ஷர்மா ஆரம்ப வீர­ராக விளை­யா­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்­திய டெஸ்ட் குழாம்

விராத் கோஹ்லி (அணித் தலைவர்), மயான்க் அகர்வால், ரோஹித் ஷர்மா, சேத்­தேஷ்வர் புஜாரா, அஜின்­கியா ரஹானே (உதவி அணித் தலைவர்), ஹனுமா விஹாரி, ரிஸ்பா பான்ட் (விக்கெட் காப்­பாளர்), ரிதிமான் சஹா (விக்கெட் காப்­பாளர்), ரவிச்­சந்­திரன் அஷ்வின், ரவீந்த்ர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷுப்மான் கில்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!