சவூதி எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா குற்றச்சாட்டு

0 746

சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) மூலமான தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அப்காயிக் நகரிலுள்ள அராம்கோ நிறுவனத்தின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இத்தாக்குதல்களால் சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 57 இலட்சம் பீப்பாய்களால் குறையும் என சவூதி அரேபியாவின் எண்ணெய்த் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தியில் சுமார் அரைப்பங்காகும்.

மைக் பொம்பியோ

இத்தாக்குதல்களை யேமனின் ஹெளதீ கிளர்ச்சி அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஆனால், ஈரானே இத்தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ குற்றம் சுமத்தியுள்ளார். ஹெளதீ கிளர்ச்சி அமைப்பின் உரிமை கோரலை அவர் நிகராரித்துள்ளார்.

யேமனிலிருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான ஆதாரம் இல்லை என டுவிட்டரில் மைக் பொம்பியோ கூறியுள்ளார். யேமனிலிருந்து தாக்குதல் நடத்துவதானால் நூற்றுக்கணக்கான மைல் தூரம் ட்ரோன்கள் பறந்து சென்றிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, இத்தாக்குதல் வட திசையிலிருந்து ஈரானினால் அல்லது ஈராக்கிலுள்ள ஈரானிய ஆதரவு கொண்ட ஷியா குழுக்களால் ஏவுகணைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமா என்பது குறித்து நிபுணர்கள் விசாரணை நடத்துவதாக வோல் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

Tehran is behind nearly 100 attacks on Saudi Arabia while Rouhani and Zarif pretend to engage in diplomacy. Amid all the calls for de-escalation, Iran has now launched an unprecedented attack on the world’s energy supply. There is no evidence the attacks came from Yemen.

— Secretary Pompeo (@SecPompeo) September 14, 2019

ஈராக் மறுப்பு
இதேவேளை, மேற்படி தாக்குதலுக்கு ஈராக்கிய பிராந்தியம் பயன்படுத்தப்படவில்லை என ஈராக்கின் பிரதமர் ஆதெல் அப்தெல் மெஹ்தி இன்று  தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டு வஞ்சகமானது- ஈரான் கண்டனம்

சவூதி அரே­பிய எண்ணெய் சுத்­தி­கரிப்பு நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரானை அமெ­ரிக்கா குற்றம் சுமத்­து­வது வஞ்­ச­க­மா­னது என ஈரான் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

நேற்­று­ நடத்­தப்­பட்ட இத்­தாக்­கு­தல்­க­ளுக்கு யேமனின் ஹெளதீ கிளர்ச்­சி­யா­ளர்கள் உரிமை கோரு­கின்­றனர்.

எனினும், இத்­தாக்­கு­தல்­களை ஹெளதீ படை­யினர் நடத்­த­வில்லை எனவும், ஈரானே இத்­தாக்­கு­தல்­க­ளுக்கு காரணம் எனவும் அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் மைக் பொம்­பியோ குற்றம் சுமத்தி­யி­ருந்தார்.

இக்­குற்­றச்­சாட்டை ஈரான் நிரா­க­ரித்­துள்­ளது. இது தொடர்­பாக ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜாவேட் ஸெரீப் இன்று  கூறு­கையில், ‘அமெ­ரிக்கா வஞ்­ச­க­மாக குற்றம் சுமத்­து­கி­றது. இத்­தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரானை குற்­றம்­சு­மத்­து­வதால் யேமனில் நடக்கும் அழிவுகள் நிறுத்தப்படப் போவதில்லை’ என்றார்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!