விஜய் சேதுபதி படத்தில் இணையும் ரித்விகா

0 84

விஜய் சேதுபதியின் புதிய படத்தில் நடிகை ரித்விகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றவர் நடிகை ரித்விகா.

‘கபாலி’, ‘ஒரு நாள் கூத்து’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

‘பிக்பொஸ்’ இரண்டா­வது சீசனில் கலந்து கொண்ட ரித்விகா, மக்களின் அமோக ஆதரவுடன் அந்த சீசனின் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பிறகு நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தில் ரித்விகா நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவர் சமூக ஆர்வலராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குநர் ரகுநந்தன் இயக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரித்விகா.

விஜய் சேதுபதியுடன் அவர் வரும் காட்சிகள் இனிமேல் தான் படமாக்கப்பட உள்ளன.

இந்தப் படத்தில் ரித்விகாவின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!