வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 16 : 2000 -அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்

0 54

1795: தென் ஆபி­ரிக்­காவின் கேப் டவுண் நகரை பிரிட்டன் கைப்­பற்­றி­யது.

1810: மிகுவேல் ஹிடால்கோ எனும் மத­குரு, மெக்­ஸி­கோவின் விடு­தலைப் போரை ஆரம்­பித்தார்.

2000: அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்

1812: பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லி­யனின் படைகள் ரஷ்­யாவின் மொஸ்­கோ­வினுள் நுழைந்­ததை அடுத்து ரஷ்ய மக்கள் நள்­ளி­ரவில் நகரை தீயிட்டுக் கொளுத்­தினர். மொஸ்கோ நகரம் அடுத்த சில நாட்­களில் முற்­றாக எரிந்­தது.

1852: லண்­டனில் மன்­செஸ்டர் நகரில் உலகின் முத­லா­வது இல­வச நூல் நிலையம் அமைக்­கப்­பட்­டது.

1908: அமெ­ரிக்­காவின் ஜெனரல் மோட்டர்ஸ் நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1920: நியூயோர்க் நகரில் ஜே.பி.மோர்கன் கட்­டி­டத்தின் முன்னால் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 38 பேர் கொல்­லப்­பட்டு 400 பேர் காய­ம­டைந்­தனர்.

1945: ஹொங்­கொங்கில் பிரித்­தா­னிய படை­யி­ன­ரிடம் ஜப்­பா­னிய படை­யினர் சர­ண­டைந்­தனர்.

1947: ஜப்­பானின் டோக்­கியோ நகரை தாக்­கிய சூறா­வ­ளி­யினால் 1930 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1955: ஆர்­ஜென்­டீ­னாவில் ஜனா­தி­பதி ஜூவான் பெரோ­னுக்­கு­ எ­தி­ராக இரா­ணுவப் புரட்சி ஆரம்­ப­மா­கி­யது.

1959: உலகின் முத­லா­வது வெற்­றி­க­ர­மான போட்டோ பிரதி இயந்­தி­ர­மான ஷெரோக்ஸ் 914 அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

1963: மலாயா, சிங்­கப்பூர், சரவாக் மற்றும் போர்­ணியோ தீவின் சாபா, ஆகி­யன இணைந்து மலே­ஷியா உரு­வாக்­கப்­பட்­டது.

1970: ஜோர்­தானில் நான்கு பய­ணிகள் விமா­னங்கள் கடத்­தப்­பட்­டதை அடுத்து மன்னர் ஹுசெயின் இரா­ணுவ ஆட்­சியை அறி­வித்தார்.

1975: அவுஸ்­தி­ரே­லி­யா­வி­ட­மி­ருந்து பப்­புவா நியூ கினி சுதந்­திரம் பெற்­றது.

1978: ஈரானில் டபாஸ் நகரை 7.5 முதல் 7.9 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் தாக்­கி­யதில் 25,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1982: லெப­னானில் பலஸ்­தீன அகதி முகாங்­க­ளான சப்ரா, ஷட்­டீலா ஆகி­ய­வற்றில் லெப­னா­னிய இரா­ணுவத் துணைப்­ப­டை­யி­னரால் ஆயி­ரக்­க­ணக்­கானோர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1987: ஓசோன் பட­லத்தைப் பாது­காக்கும் பிர­க­டனம் மொண்ட்­றியல் நகரில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

2000: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான எம்.எச்.எம். அஷ்ரப் கேகாலை அர­நா­யக்­கவில் இடம்­பெற்ற ஹெலி­கொப்டர் விபத்தில் உயி­ரி­ழந்தார்.

2002: தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான இலங்கை அர­சாங்­கத்­துக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை தாய்­லாந்தில் ஆரம்­ப­மா­கியது.

2007: தாய்­லாந்தில் 128 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 89 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2013: அமெ­ரிக்­காவின் வொஷிங்டன் டி.சி நக­ரி­லுள்ள கடற்­ப­டைத்­த­ள­மொன்றில் ஆயு­த­பாணி நபர் ஒருவர் மேற்­கொண்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தால் 12 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2014: சிரி­யாவின் கொபானி பிராந்தியத்தில் சிரிய, குர்திய படைகளுக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்களை ஆரம்பித்தனர்.

இத்தாக்குதல்களால் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் 4 இலட்சம் பொதுமக்கள் துருக்கிக்கு இடம்பெயர்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!