கணவரை கட்டி வைத்துவிட்டு ஆணுறுப்பை துண்டித்த பெண் கைது!

0 150

தனது கண­வரை கட்­டி­வைத்­து­விட்டு , அவரின் ஆணு­றுப்பை மனைவி துண்­டித்த சம்­பவம் அமெ­ரிக்­காவின் வட கரோ­லினா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

61 வய­தான ஜேம்ஸ் என்­ப­வரின் ஆணு­றுப்பே துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்­பாக, ஜேம்ஸின் மனை­வி­யான விக்­டோ­ரியா தோமஸ் பிராபட் எனும் பெண்ணை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அதி­காலை 4 மணி­ய­ளவில் பொலிஸார் மேற்­படி தம்­ப­தியின் வீட்­டுக்குச் சென்­ற­போது, ஆணு­றுப்பு துண்­டிக்­கப்­பட்ட நிலையில் ஜேம்ஸ் இருப்­பதை கண்­டனர்.

அதை­ய­டுத்து அவர்கள் பாதிக்­கப்­பட்ட பகு­தியில் ஐஸ் கட்­டி­களை வைத்து, அவரை வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­தனர். ஜேம்ஸை கட்­டி­வைத்­து ­விட்டு, அவரின் ஆணு­றுப்பை விக்­டோ­ரியா துண்­டித்தார் என பொலி­ஸாரின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

விக்­டோ­ரியா ஏன் இவ்­வாறு செய்தார் என்­பது தெரி­ய­வில்லை என பொலிஸார் கூறி­யுள்­ளனர். எனினும், ஜேம்ஸின் வலிக்குக் காரணம் அவர் பாவம் செய்­த­மையும் திரு­ம­ணத்­துக்கு அப்பால் மற்­றொ­ரு­வ­ருடன் பாலியல் உறவில் ஈடுபட்டமையுமே காரணம் என பொலிஸாரிடம் விக்டோரியா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!