தவளைத் திருமணத்தின் பின் கடும் மழை பெய்ததால் தவளைகளுக்கு விவாகரத்து நடத்திய மக்கள்

0 1,381

மழை பெய்வதற்காக தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு, சில வாரங்களின் பின் கடும் மழை பெய்ததால் அத்தவளைகளுக்கு விவாகரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்திலேயே இந்த விநோத திருமணமும் விவாகரத்தும் அரங்கேறியுள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடும் வெயிலினால் வரட்சி ஏற்பட்டபோது, கடந்த ஜுலை மாதம் போபால் நகரில் தவளைகளுக்கு மனிதர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்டது. இத்திருமணத்தால் மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆனால், சில வாரங்களின் பின் கடும் மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், தவளைகளின் திருமணத்தால் தான் அதிக மழை பெய்தது என நம்பிய அம்மக்கள் மேற்படி தவளைகளுக்கு விவாகரத்துச் செய்யத் தீர்மானித்தனர்.

இதன்படி, மேற்படி தவளைகளுக்கான விவாகரத்துச் சடங்கு கடந்த புதன்கிழமை நடத்தப்பட்டது. இது தொடர்பாக சுரேஷ் அகர்வால் என்பவர் கூறுகையில், “மழைக்காக இரு தவளைகளுக்கு நாம் திருமணம் செய்வித்தோம்.

இப்போது அதிக மழை பெய்ததால், ஆலயமொன்றில் வைத்து மேற்படி தவளைகளுக்கு விவாகரத்து செய்வித்தோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!