பல்கலைக்கழகத்துக்கு லஞ்சம் வழங்கிய நடிகை ஹூப்மேனுக்கு சிறைத்தண்டனை

0 43

தனது மகள் நுழை­வுத்­தேர்வில் வெற்றி பெறு­வ­தற்­காக கல்­லூ­ரிக்கு லஞ்சம் வழங்­கிய குற்­றச்­சாட்டில் ஹொலிவுட் நடிகை ஹூப்­மே­னுக்கு நீதி­மன்றம் 2 வாரம் சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. நடிகை பெலி­சிட்டி ஹூப்மேன். இவர் தனது மகளை பிர­பல பல்­க­லைக்­க­ழ­கத்தில் சேர்த்து படிக்க வைக்க ஆசைப்­பட்டார்.

கணவருடன் நடிகை பெலி­சிட்டி ஹூப்மே

 

இதற்­காக மகளை ரக­சி­ய­மாக நுழை­வுத்­தேர்வு எழுத வைத்து அதிக புள்­ளிகள் தரு­வ­தற்­காக அதி­கா­ரி­க­ளுக்கு 15 ஆயிரம் டொலர் லஞ்சம் கொடுத்­துள்ளார். நடிகை ஹூப்மேன் மீது பாஸ்டன் நகரில் உள்ள நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­பட்­டது.

கடந்த மே மாதம் வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது மகள் நுழை­வுத்­தேர்வில் அதிக மதிப்­பெண்கள் பெறு­வ­தற்­காக லஞ்சம் கொடுத்­ததை ஹூப்மேன் ஒப்­புக்­கொண்டார். அவர் தனது செய­லுக்­காக கண்ணீர் சிந்­தி­ய­வாறு மன்­னிப்பு கேட்டார். இந்த வழக்கில் நடிகை ஹூப்மேன் குற்­ற­வாளி என நீதி­பதி இந்­திரா தல்­வானி தீர்ப்­ப­ளித்தார்.

அவ­ரது தண்­டனை கடந்த வெள்ளிக்­கி­ழமை அறி­விக்­கப்­பட்­டது. இதன்­படி, நடிகை, பெலி­சிட்டி ஹூப்­மே­னுக்கு 2 வாரம் சிறைத்­தண்­டனை விதித்து நீதி­பதி இந்­திரா தல்­வானி உத்­த­ர­விட்டார். அத்­துடன். நடிகை ஹூப்­மே­னுக்கு 30 ஆயிரம் டாலர் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.

“தகுதி வாய்ந்த மாணவ, மாண­வி­களை ஏமாற்­று­வ­தற்கு தங்கள் செல்வ வளத்தை பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்ற தக­வலை சமூ­கத்­துக்கு விடுக்க வேண்டியது அவசியம். எனவே உங்களை தண்டனையின்றி விட முடியாது” என நீதிபதி இந்திரா தல்வானி குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!