19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 106 ஓட்டங்களைத் தக்கவைத்து சம்பியனான இந்தியா

0 43

(எம்.எஸ். சில்­வெஸ்டர்)

பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­  நடை­பெற்ற 19 வய­துக்­குட்­பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்­டியில் போராட்டக் குணத்­துடன் 106 ஓட்­டங்­களைத் தக்­க­வைத்­துக்­கொண்ட இந்­தியா சம்­பியன் பட்­டத்தைத் தக்­க­வைத்­துக்­கொண்­டது.

துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்­கா­த­போ­திலும் பந்­து­வீச்சில் அபார ஆற்­றலை வெளிப்­ப­டுத்தி மிகவும் பர­ப­ரப்­பான முறையில் 5 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்று 7ஆவது தட­வை­யாக 19 வய­துக்­குட்­பட்ட ஆசிய கிண்ண சம்­பியன் பட்­டத்தை இந்­தியா சுவீ­க­ரித்­தது. 19 வய­துக்­குட்­பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் வர­லாற்றில் முதல் தட­வை­யாக பங்­க­ளாதேஷ் இரண்டாம் இடத்தைப் பெற்­றது.

இந்­திய அணியை 32.4 ஓவர்­களில் 106 ஒட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்­திய பங்­க­ளாதேஷ், பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டி­ய­போது ஒரு கட்­டத்தில் தடு­மாற்­றத்தை அடைந்த போதிலும் மற்­றொரு கட்­டத்தில் பலம்­வாய்ந்த நிலையில் இருந்­தது.

107 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் 15 ஆவது ஓவரில் 6ஆவது விக்­கெட்டை இழந்­த­போது அதன் மொத்த எண்­ணிக்கை 51 ஓட்­டங்­க­ளாக இருந்­தது. ஆட்­ட­மி­ழந்த 6 வீரர்­களும் ஒற்றை இலக்க எண்­ணிக்­கை­யுடன் அல்­லது ஓட்டம் எடுக்­காமல் ஆட்­ட­மி­ழந்­தனர்.

இந்நிலையில் அணித் தலைவர் அக்பர் அலியும் 8ஆம் இலக்க வீரர் மிரித்­துன்ஜோய் சௌதரி ஆகிய இரு­வரும் மிகவும் நிதா­னத்­து­டனும் பொறுப்­பு­ணர்­வு­டனும் துடுப்­பெ­டுத்­தாடி 36 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தி­ருந்­த­போது மழை குறுக்­கிட்­டதால் 19.4 ஓவர்­க­ளுடன் ஆட்டம் இடை­நி­றுத்­தப்­பட்­டது.

ஆட்டம் தொடர்ந்த போது சில நிமி­டங்­களில் மொத்த எண்­ணிக்கை 78 ஓட்­டங்­க­ளாக இருந்­த­போது அன்­கோ­லேக்­கரின் பந்­து­விச்சில் அக்பர் அலி ஆட்­ட­மி­ழந்­த­துடன் 2 பந்­துகள் கழித்து மிரித்­துன்ஜோய் சௌத­ரியை சுஷாந்த் ஷர்மா வெளி­யேற்­றினார்.

எனினும் தன்சிப் ஹசன் சக்கிப், ரக்­கிபுல் ஹசன் ஆகிய இரு­வரும் 9ஆவது விக்­கெட்டில் 23 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இந்­திய அணிக்கு பெரும் நெருக்­க­டியைக் கொடுத்­தனர்.ஆனால், 33ஆவது ஓவரில் கடைசி இரண்டு விக்­கெட்­களை அன்­கோ­லேக்கர் வீழ்த்த இந்­தியா வெற்­றி­யீட்­டி­யது.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த இந்­தியா, முதல் 3 விக்­கெட்­களை இழந்­த­போது அதன் மொத்த எண்­ணிக்கை வெறும் 8 ஓட்­டங்­க­ளாக இருந்­தது.

ஆனால், அணித் தலைவர் துருவ் ஜுரெல் (33 ஓட்­டங்கள்), ஷஷ்வாத் ராவத் (19) ஆகிய இரு­வரும் 4ஆவது விக்­கெட்டில் 45 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இந்­திய அணிக்கு உயி­ரூட்­டினர். ஆனால் அதன் பின்னர் இந்­திய அணி சீரான இடை­வெ­ளி­களில் விக்­கெட்­களை இழந்த வண்ணம் இருந்­தது. கரண் லால் மாத்­திரம் துணிச்­ச­லுடன் துடுப்­பெ­டுத்­தாடி 37 ஓட்­டங்­களைப் பெற்று இந்­திய அணி 100 ஓட்­டங்­களைக் கடக்­க­வைத்தார்.

இந்த சுற்றுப் போட்­டியில் இலங்கை, பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், ஐக்­கிய அரபு இராச்­சியம், நேபாளம், குவைத், ஆகிய அணி­களும் பங்­கு­பற்­றி­யி­ருந்­தன.

எண்­ணிக்கை சுருக்கம்
19இன் கீழ் இந்­தியா 32.4 ஓவர்­களில் சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 106 (கரண் லால் 37, துருவி ஜுரெல் 33, ஷஷ்வாத் ராவத் 19, ஷமிம் ஹொசெய்ன் 8 – 3 விக்., மிரித்­துன்ஜோய் சௌதரி 18 – 3 விக்.)

19இன் கீழ் பங்­க­ளாதேஷ் 33 ஓவர்களில் சகலரும் ஆட்டமிழந்து 101 (அக்பர் அலி 23, மிரித்துன்ஜோய் சௌதரி 21, ஹசன் சக்கிப் 12, ரக்கிபுல் ஹசன் 11 ஆ.இ., ஆதர்வா அன்கோலேக்கர் 28 – 5 விக்., ஆகாஷ் சிங் 12 – 3 விக்.) ஆட்டநாயகன்: ஆதர்வா அன்கோலேக்கர், தொடர்நாயகன்: இந்தியாவின் அர்ஷுன் அஸாத்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!