அறிமுகப் போட்டியில் பார்சிலோனா சார்பாக கோல் போட்ட 16 வயது வீரர் ஃபெட்டி

0 128

லா லீகா கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் பார்­சி­லோனா சார்­பாக தனது அறி­முகப் போட்­டி­யி­லேயே 16 வய­தான அன்சு ஃபெட்டி 2ஆவது நிமி­டத்தில் கோல் போட்டு அசத்­தி­யுள்ளார்.

வெலென்­சி­யா­வுக்கு எதி­ராக நூ கேம்ப் அரங்கில் நடை­பெற்ற போட்­டியில் முன்­கள வீர­ராக அறி­மு­க­மான அன்சு ஃபெட்டி, போட்டி ஆரம்­பித்து 2 நிமி­டங்கள் ஆன நிலையில் ப்ரென்கி டி ஜொங் பரி­மா­றிய பந்தை யாருமே எதிர்­பா­ராத வகையில் மிக அலா­தி­யான முறையில் கோல் ஒன்றைப் போட்டு பார்­சி­லோ­னாவை முன்­னி­லையில் இட்டார்.

ஐந்து நிமி­டங்கள் கழித்து இரண்­டா­வது கோலிலும் ஃபெட்­டியின் பங்­க­ளிப்பு இருந்­தது. இம்­முறை அவர் மிகவும் சாமர்த்­தி­ய­மாக பரி­மா­றிய பந்தை டி ஜொங் கோலாக்க பார்­ஸி­லோன 2–0 என்ற கோல் கணக்கில் முன்­னிலை அடைந்­தது. இப் போட்­டியில் வெலென்­சியா அணியை 5–2 என்ற கோல்கள் அடிப்படையில் பார்சிலோனா வெற்றி கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!