டென்னிஸ் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் 36ஆவது வயதில் மீள்பிரவேசம் செய்யவுள்ளார்

0 205

நான்கு தட­வைகள் மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) போட்­டி­களில் சம்­பி­ய­னா­ன­வரும் முன்னாள் முதல் நிலை வீராங்­க­னை­யு­மான பெல்­ஜி­யதைச் சேர்ந்த கிம் கிளைஸ்டர்ஸ் தனது 36ஆவது வயதில் சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் மீள் பிர­வேசம் செய்­ய­வுள்ளார்.

2020இல் நடை­பெ­ற­வுள்ள மகளிர் டென்னிஸ் சங்க போட்­டியின் மூலம் சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் அவர் மீள் பிர­வேசம் செய்­ய­வுள்ளார்.

செரீனா வில்­லியம்ஸ், விக்­டோ­ரியா அஸ­ரென்கா ஆகியோர் தாயான பின்­னரும் டென்னிஸ் விளை­யாட்டில் ஈடு­பட்­டு­வ­ரு­வது தன்னை வெகு­வாக கவர்ந்­துள்­ள­தா­கவும் அவர்­களைப் பின்­பற்றி தானும் டென்னிஸ் விளை­யாட்­டுக்கு திரும்­ப­வுள்­ள­தா­கவும் கிளைஸ்டர்ஸ் தெரி­வித்தார்.

“அதி உய­ரிய போட்­டி­களில் தாய்மார் பங்­கு­பற்­றி­வ­ரு­கின்­றனர். அது மற்­றை­ய­வர்­க­ளுக்கு எடுத்­துக்­காட்­டா­கவும் உற்­சா­க­மூட்­டு­வ­தா­கவும் அமை­கின்­றது” என அவர் குறிப்­பிட்டார்.

திரு­மண பந்­தத்தில் ஈடு­பட்­டதால் 2007இல் முதல் தட­வை­யாக ஓய்வு பெற்ற கிளைஸ்டர்ஸ், 2009இல் மீள் வருகை செய்து மேலும் 3 மாபெரும் டென்னிஸ் சம்­பியன் (அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் 2009 மற்றும் 2010, அவுஸ்­தி­ரே­லியா பகி­ரங்க டென்னிஸ் 2011) பட்­டங்­களை வென்­றெ­டுத்தார்.

இந்­நி­லையில் 2012இல் அவர் இரண்­டா­வது தட­வை­யாக தனது ஓய்வை அறிவித்தார். கிளைஸ்டர்ஸ் முதன்முதலாக 2005 இல் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் சம்பியனாகியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!