ஆசிய சிரேஷ்ட ஆண்கள் கரப்பந்தாட்டம்: 3 லீக் போட்டிகளிலும் இலங்கை தோல்வி

0 27

ஈரானின் தெஹ்ரான் உள்­ளக கரப்­பந்­தாட்ட அரங்கில் நடை­பெற்று­ வரும் 20ஆவது ஆசிய சிரேஷ்ட ஆண்கள் கரப்­பந்­தாட்ட லீக் சுற்றில் ஏ குழுவில் இடம்­பெற்ற இலங்கை தனது சகல போட்­டி­க­ளிலும் தோல்வி அடைந்­துள்­ளது.

வெள்­ளி­யன்று ஆரம்­ப­மான இச் சுற்றுப் போட்­டியில் தனது முத­லா­வது போட்­டியில் ஈரா­னிடம் 3 நேர் செட்­களில் (15 – 25, 17 – 25, 23 – 25) தோல்வி அடைந்த இலங்கை, சனிக்­கி­ழமை நடை­பெற்ற இரண்­டா­வது போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யா­வி­டமும் 3 நேர் செட்­களில் (15–25, 30 – 32, 13–25) தோல்வி அடைந்­தது.

இக் குழு­வுக்­கான கடைசி லீக் போட்­டியில் கத்­தாரை நேற்று எதிர்த்­தா­டிய இலங்­கைக்கு மீண்டும் ஏமாற்­றமே காத்­தி­ருந்­தது. அப் போட்­டியில் 3 நேர் செட்­களில் (25 – 21, 25 – 14, 25 – 15) கத்தார் இலகுவாக வெற்றிபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!