மீண்டும் நடிக்க வரும் அசின்

0 104

அஜித், விஜய் உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்த அசின், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார்.

கமல், விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அசின் திடீர் என்று இந்தியில் நடிக்க சென்றார்.

இந்தியில் ரீமேக் ஆன கஜினி படத்தில் அமிர்கானுடன் நடித்து பாலிவூட்டில் அறிமுகமானார்.

அடுத்து ஐந்தாறு படங்களில் மட்டுமே இந்தியில் நடித்துவிட்டு தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்துகொண்டு செட்டில் ஆனார்.

ஒரு பெண் குழந்தைக்கும் தாய் ஆனார்.

இனிமேல் நடிக்க வரமாட்டார் என்று ரசிகர்கள் முடிவு செய்திருந்த நிலையில் அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை, கணவருடன் இருக்கும் படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் அசின், சமீபத்தில் ஒரு படத்தை பகிர்ந்தார்.

இது யாருடைய படம் என்று உற்றுநோக்கிய­போது அது அசின்தான் என்பது தெரிய வந்தது.

அந்த அளவுக்கு அவரது ஹேர் ஸ்டைல், உடல்தோற்றம், முகச்சாயல் எல்லாமே மாறி விட்டன.

இந்த படம் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது.

ரீ என்ட்ரிக்கு தயாராகி இருக்கும் அசினை விரைவில் இந்தி படத்தில் பார்க்கலாம்.

தமிழ் படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் காத்திருக்கிறது.

ஆனால் அதை ஏற்பாரா என்பதுபற்றி எதுவும் தெரியவில்லை.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!