உலக சந்தையில் எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு

0 1,099

சவூதி அரேபியாவில் அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஆராம்கோ நிறுவத்தின் இரு எண்ணெய் நிலையங்கள் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இத்தாக்குதல்களுக்கு ஈரான் மீது அமெரிக்கா குற்றம் சுமத்தும் பின்னணியில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

நியூ யோர்க் வணிக பரிவர்த்தனை நிலையத்தின் (New York Mercantile Exchange -NYME) இலத்திரனியல் வர்த்தகத்தல், அமெரிக்க மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் (பெரல்) 5.61 டொலர்களால் அதிகரித்து 60.6 டொலர்களாக உள்ளது. இது 10.2 சதவீத அதிகரிப்பாகும்.

அதேவேளை, சர்வதேச எண்ணெய் விலை அளவுமட்டமாக கருதப்படுமு; பிரென்ட் மசகு எணள்ணெய் பீப்பாய் 7.84 டொலர்களால் அதிகரித்து 68.06 ஆக டொலர்களாக ள்ளது. இது 13 சதவீத அதிகரிப்பாகும்.

சவூதி அரேபியாவிலுள்ள ஆரோம்கோ நிறுவனத்தின் எண்ணெய் நிலையமொன்று


ஆரோம்கோ எண்ணெய் நிலையங்கள் மீதூன தாக்குல்களால் சவூதி அரேபியாவின் மசகு எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 57 இலட்சம் பீப்பாய்களால் குறைந்துள்ளது என சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. இது அந்நாட்டின் நாளாந்த எண்ணெய் உற்பத்தியின் 50 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!