விக்னேஷ் சிவன், நயன்தாரா இணையும் ‘நெற்றிக்கண்’

0 178

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நயன்தாராவின் 65- ஆவது படத்திற்கு ரஜினி பட தலைப்பு வைக்கப்­பட்­டுள்­­­ளது.

‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து திரில்லர் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.

அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்­தின் டைட்டில் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதே டைட்டிலில் கடந்த ஆண்டு 1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்­­தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் டைட்டிலுக்கு அனுமதி கொடுத்து வாழ்த்து தெரிவித்த கவிதாலயா நிறுவனத்திற்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது.

இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குநர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார்.

ேலாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!