வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 17 : 1928 -அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சூறாவளி தாக்கியதால் சுமார் 2500 பேர் உயிரிழந்தனர்

0 62

1630 : அமெரிக்காவின் பொஸ்டன் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.

1631 : ரோமப் பேரரசுடனான 30 ஆண்டுகள் போரில் சுவீடன் பிறைட்டென்ஃபெல்ட் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.

1928: அமெரிகாவின் புளோரிடா மாநிலத்தை சூறாவளி தாக்கியதால் சுமார் 2500 பேர் உயிரிழந்தனர்.

1787 : ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியா நகரில் கையெழுத்திடப்பட்டது.

1809 : பின்லாந்து போரில் சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து ரஷ்யாவிடம் கையளிக்கப்பட்டது.

1862 : அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

பல்லாயிரக்கனக்கானோர் காயமடைந்தனர்.இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.

1862 : அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது பென்சில்வேனியாவில் ஆயுதக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் கொல்லப்பட்டனர்.

1908 : ஓர்வில் ரைட்டின் வானூர்தி தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த தோமஸ் செல்ஃபிரிட்ஜ் என்பவர் கொல்லப்பட்டார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.

1928 : அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 2,500 பேர் கொல்லப்பட்டனர்.

1929 : லித்துவேனியாவில் இடம்பெற்ற புராட்சி ஒன்றில் ஜனாதிபதி ஆகுஸ்டீனஸ் வொல்டெமாரெஸ் பதவியிழந்தார்.

1939 : போலந்தின் மீது சோவியத் ஒன்றியம் படையெடுத்து கிழக்குப் பகுதியைப் கைப்பற்றியது.

1939 : இரண்டாம் உலகப் போரில் பிரித்தானிய விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று ஜேர்மனியரால் தாக்கி அழிக்கப்பட்டது.

1943 : இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவின் பிறயான்ஸ்க் நகரம் நாசிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

1949 : டொரோண்டோ துறைமுகத்தில் கனேடியக் கப்பல் ஒன்று எரிந்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.

1956 : அவூஸ்திரேலியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி காண்பிக்கப்பட்டது.

1957: ஐ.நா.வில் மலேஷியா இணைந்தது

1974: பங்களாதேஷ், கிரெனடா, கினியாபிஸோ ஆகியன ஐநாவில் இணைந்தன

1976 : நாசா நிறுவனம் தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டது.

1978 : இஸ்ரேல், எகிப்து ஆகியன கேம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1980 : போலந்தில் சொலிடாரிற்றி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.

1983: மிஸ் அமெரிக்கா அழகுராணியாக தெரிவான முதல் கறுப்பின பெண் எனும் பெருமையை வனேஸா வில்லியம்ஸ் பெற்றார்.

1980 : நிக்கராகுவாவின் முன்னாள் ஜனாதிபதி அனாஸ்டாசியோ சொமோசா டெபாயில் பராகுவேயில் படுகொலை செய்யப்பட்டார்.

1991 : லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.

1993 : கடைசி ரஷ்யப் படை போலந்தில் இருந்து வெளியேறியது.

2004 : இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

2006: தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனது ஹங்கேரிய சோசலிசக் கட்சி பொய்கூற வேண்டியிருந்தது என ஹங்கேரிய பிரதமர் ஒப்புக்கொண்ட பிரத்தியேக உரை அடங்கிய ஒலி நாடா பகிரங்கமானதால் நாடாளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!