மியன்மாரில் எஞ்சியிருக்கும் 6 இலட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இன அழிப்புக்கான ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்!

ஐ.நா. விசாரணையாளர்கள் தெரிவிப்பு

0 194

மியன்­மாரில் எஞ்­சி­யுள்ள 6 இலட்சம் ரோஹிங்யா முஸ்­லிம்கள் இன அழிப்­புக்­கான ஆபத்தை எதிர்­கொண்­டுள்­ளனர் என ஐக்­கிய நாடுகள் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

மியன்­மாரின் ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்யா இன முஸ்­லிம்கள் மீதான வன்­மு­றைகள், 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீவி­ர­ம­டைந்­தன. முஸ்­லிம்கள் மீது கொடூரத் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­துடன், அவர்­க­ளது வீடுகள் தீயிட்டுக் கொளுத்­தப்­பட்­டன.

பெண்­க­ளுக்கு எதி­ரான பாலியல் துன்­பு­றுத்­தல்­களும் நடந்­தன. இதில் அந்­நாட்டு இரா­ணு­வமும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன அழிப்புத் தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இதனால், அங்­கி­ருந்து 740,000 ரோஹிங்­கியா முஸ்­லிம்கள் அயல் நாடான பங்­க­ளா­தேஷில் அக­தி­க­ளாகக் குடி­யே­றினர்.

இந்த நிலையில் மேற்­படி ஐ.நா. குழு­வினர் தயா­ரித்­துள்ள இறுதி அறிக்­கையில், இன்னும் 6லட்சம் ரோஹிங்­கியா முஸ்­லிம்கள் மியன்­மாரில் உள்­ளனர் எனவும் அவர்கள் இருப்­பது இன அழிப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான ஆபத்து எனவும் தெரி­விக்­கப்­பட்டுள்ள­தாக ஏ.எவ்.பி. செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்த அறிக்கை இன்று செவ்­வாய்க்­கி­ழமை ஜெனீ­வாவில் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இது குறித்து ஐ. நாவின் விசா­ரணைக் குழு அதி­காரி ஒருவர் கூறும்­போது மியன்மார் இனப்­ப­டு­கொலை எண்­ணத்தை தொடர்ந்து வரு­கி­றது.

அங்­குள்ள 6 லட்சம் ரோ­ஹிங்­கி­யாக்கள் இனப்­ப­டு­கொ­லைக்­கான அபா­யத்தில் உள்­ளனர். அவர்கள் மனி­தா­பி­மா­ன­மற்ற சூழலில் வாழ்ந்து வரு­கின்­றனர். ஆதா­ரங்­களை அழிப்­பது, நியா­ய­மான விசா­ர­ணை­களை நடக்க அனுமதி மறுப்பது ரோஹிங்கியா முஸ்லிம்களின் இருப்பிடங்களை அழித்தல் போன்ற பணிகளில் மியன்மார் அரசு ஈடுபட்டுள்ளது’என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!