சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களில் ஈரான் சம்பந்தப்பட்டமைக்கான ஆதாரம் உள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு

0 38

சவூதி அரே­பி­யாவின் எண்ணெய் நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­களில் ஈரான் சம்­பந்­தப்­பட்­ட­மைக்­கான ஆதாரம் உள்­ள­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. சவூதி அரே­பிய அர­சுக்குச் சொந்­த­மான ஆராம்கோ நிறு­வ­னத்தின் இரு எண்ணெய் நிலை­யங்கள் மீது கடந்த சனிக்­கி­ழமை தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

இத்­தாக்­கு­தல்­களால் சவூதி அரேபி­யாவின் எண்ணெய் உற்­பத்தி நாளொன்­றுக்கு 58 இலட்சம் பீப்­பாய்­களால் குறைந்­துள்­ளது என சவூதி அரே­பியா தெரி­வித்­துள்­ளது. இது சவூ­தியின் எண்ணெய் உற்­பத்­தியில் சுமார் அரைப் பங்­காகும்.

இத்­தாக்­கு­தல்­க­ளுக்கு யேமனின் ஹெளதீ கிளர்ச்சி அமைப்பு உரிமை கோரி­யுள்­ளது. ஆளில்லா விமா­னங்கள் மூலம் இத்­தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­பட்­டது. எனினும், அதை அமெ­ரிக்கா நிரா­க­ரித்­துள்­ளது.

இத்­தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரானே காரணம் என அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் மைக் பொம்­பியோ குற்றம் சுமத்­தி­யி­ருந்தார். இக்­குற்­றச்­சாட்டை ஈரா­னிய அர­சாங்கம் நேற்­று மறுத்­தி­ருந்­தது. இந்­நி­லையில், சேத­ம­டைந்த எண்ணெய் நிலை­யத்தின் செய்­மதிப் படங்­களை அமெ­ரிக்கா வெளி­யிட்­டுள்­ளது.

இத்­தாக்­கு­தல்­களால் 19 இடங்­களில் ஏற்­பட்ட பாதிப்­புகள் மூலம், இத்­தாக்­கு­தல்கள் மேற்கு, வட­மேற்கு பகு­தி­க­ளி­லி­ருந்து வந்­தவை எனக் காட்­டு­வ­தா­கவும் பெயர் குறிப்­பி­டப்­ப­டாத அமெ­ரிக்க அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.
ஹெளதீ கிளர்ச்­சி­யா­ளர்­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள யேமன் பிராந்­தி­ய­மா­னது, மேற்­படி எண்ணெய் நிலை­யங்­க­ளு­க்கு தென் மேற்கு திசையில் உள்­ளமை சுட்­டி­க­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், மேற்படி தாக்குதல்கள் வளைகுடாவின் வடக்கில் ஈரான் அல்லது ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டிருக்கலாம் என செய்மதிப் படங்கள் உணர்த்துவதாக மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!