அரை மரதனில் கென்யாவின் கம்வொரர் புதிய உலக சாதனை நிலைநாட்டினார்

0 100

கோபன்­ஹே­கனில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற அரை மரதன் ஓட்டப் போட்­டியில் கென்ய வீரர் ஜெவ்றி கம்­வொரர் புதிய உலக சாதனை நிலை­நாட்­டினார்.

13.1 மைல் தூரத்தைக் கொண்ட இப் போட்­டியை 58.01 செக்­கன்­களில் நிறைவு செய்த கம்­வொரர், வெலன்­ஷி­யாவில் கடந்த வருடம் தனது சக நாட்­ட­வ­ரான ஏப்­ரஹாம் கிப்டும் நிலை­நாட்­டிய உலக சாத­னையை முறி­ய­டித்து புதிய உலக சாதனையை நிலை­நாட்­டினார்.

ஏப்­ரஹாம் கிப்டும் கடந்த வருடம் அரை மரதன் ஓட்டப் போட்­டியை 58.18 செக்­கன்­களில் நிறைவு செய்­தி­ருந்தார்.
மெய்­வல்­லுநர் சம்­மே­ள­னங்­களின் சர்­வ­தேச சங்­கத்தின் (ஐ.ஏ.ஏ.எவ்.) கோல்ட் லேபல் அரை மரதன் போட்­டியில் 75 செக்­கன்கள் வித்­தி­யா­சத்தில் தனது சக நாட்­ட­வ­ரான பேர்னார்ட் கிப்­கோ­ரிரை ஜெவ்றி கம்­வொரர் வெற்­றி­கொண்டார். கிப்கோர் இப் போட்­டியை நிறைவு செய்ய 59. 16 செக்­கன்கள் எடுத்­துக்­கொண்டார்.

எதி­யோப்­பி­யாவின் பிய­ஹானு வெண்­டேமு சேகு மூன்றாம் இடத்தைப் பெற்றார். மக­ளி­ருக்­கான அரை மரதன் ஓட்டப் போட்­டியை 1 மணித்­தி­யாலம் 05 நிமி­டங்கள் 01 செக்­கனில் நிறைவு செய்த எதி­யோப்­பி­யாவின் பேர்ஹேன் டிபாபா முதலாம் இடத்தைப் பெற்றார். கென்ய வீராங்­க­னை­க­ளான இவோலின் சேர்சேர் இரண்டாம் இடத்தையும் டொர்க்காஸ் டுய்ட்டோக் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!