சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் ஆப்கன் தொடர்ச்சியான 12ஆவது வெற்றி

0 158

டாக்­காவில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான மும்­முனை சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடர் போட்­டியில் 25 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டிய ஆப்­கா­னிஸ்தான், சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் வர­லாற்றில் தொடர்ச்­சி­யான 12ஆவது வெற்­றியைப் பதிவு செய்து சாதனை நிலை­நாட்­டி­யுள்­ளது.

மொஹமத் நபி

மொஹமத் நபியின் அபார துடுப்­பாட்­டமும் முஜீப் உர் ரஹ்­மானின் சிறந்த பந்­து­வீச்சும் ஆப்­கா­னிஸ்­தானின் வெற்­றியில் பெரும் பங்­காற்­றின.

சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அரங்கில் பூர்த்தி செய்­யப்­பட்ட போட்­டி­களில் தொடர்ச்­சி­யாக 12ஆவது வெற்­றியை இதன் மூலம் பதி­வு­செய்த ஆப்­கா­னிஸ்தான், 2016 – 17 கிரிக்கெட் பரு­வ­கா­லத்தில் நிலை­நாட்­டிய 11 தொடர்­சி­யான வெற்­றிகள் என்ற தனது சொந்த சாத­னையை முறி­ய­டித்து புதிய சாத­னையை நிலை­நாட்­டி­யுள்­ளது.

இங்­கி­லாந்து, அயர்­லாந்து, பாகிஸ்தான் ஆகி­யன தலா 8 தொடர்ச்­சி­யான வெற்­றி­க­ளுடன் மூன்றாம் இடத்தில் உள்­ளன.

மேலும் ஸிம்­பாப்­வேக்கு எதி­ரான முத­லா­வது போட்­டியில் கடந்த சனிக்­கி­ழமை வெற்­றி­பெற்ற ஆப்­கா­னிஸ்தான், சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அரங்கில் மிகக் குறைந்த போட்­டி­களில் 50 வெற்­றி­களை ஈட்­டிய அணி என்ற சாத­னைக்குச் சொந்­த­மா­னது.

ஆப்­கா­னிஸ்தான் 72 போட்­டி­களில் 50 வெற்­றி­களைப் பதிவு செய்­துள்­ளது.

ஞாயி­றன்று நடை­பெற்ற இரண்­டா­வது போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் 20 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 164 ஓட்­டங்­களைக் குவித்­தது.

பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் 19.5 ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 139 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆப்­கா­னிஸ்தான் ஒரு கட்­டத்தில் 4 விக்­கெட்­களை இழந்து 40 ஓட்­டங்­க­ளுடன் தடு­மா­றிக்­கொண்­டி­ருந்­தது.

ஆனால் மொஹமத் நபி 54 பந்­து­களை எதிர்­கொண்டு 7 சிக்­சர்­க­ளையும் 3 பவுண்ட்­றி­க­ளையும் விளாசி ஆட்­ட­மி­ழக்­காமல் 84 ஓட்­டங்­களைப் பெற்று ஆப்­கா­னிஸ்தான் அணியை பல­மான நிலைக்கு இட்டுச் சென்றார். இவரும், 40 ஓட்­டங்­களைப் பெற்ற அஸ்கர் அப்­கனும் 5ஆவது விக்­கெட்டில் 79 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தனர்.

பதி­லுக்குத் துடுப்­பெ­டு­த்­தா­டிய பங்­க­ளாதேஷ் சார்­பாக மஹ்­மு­துல்லாஹ் மாத்­தி­ரமே திற­மையை வெளிப்­ப­டுத்தி 44 ஓட்­டங்­களைப் பெற்றார்.

எண்­ணிக்கை சுருக்கம்
ஆப்­கா­னிஸ்தான் 20 ஓவர்­களில் 164–6 விக். (மொஹமத் நபி 84 ஆ.இ. அஸ்கர் அப்கன் 40, மொஹமத் சய்­புதின் 33–4 விக்., ஷக்கிப் அல் ஹசன் 19–2 விக்.)

பங்­க­ளாதேஷ் 19.5 ஓவர்களில் சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 139 (மஹ்­மு­துல்லாஹ் 44, சபிர் ரஹ்மான் 24. முஜீப் உர் ரஹ்மான் 15–4 விக்., ராஷித் கான் 23–2 விக்.) ஆட்­ட­நா­யகன்: மொஹமத் நபி.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!