அவசர எண்ணுக்கு அழைத்து பீட்ஸா கேட்கும் பொதுமக்கள் -டெல்லி ரயில்வே பொலிஸார் கவலை

0 118

ரயில் பய­ணத்தின் போது ஏதேனும் அவ­சர தேவை ஏற்­பட்­டாலோ அல்­லது அவ­சர உத­விக்கோ பொது­மக்கள் பொலி­ஸாரை அழைப்­ப­தற்­காக 1512 என்ற அவ­சர எண்ணை டெல்லி ரயில்வே பொலி­ஸார் அறி­வித்­துள்­ளனர்.

வைப்பகப்படம்

 

ஆனால் அந்த அவ­சர எண்ணை தொடர்­பு­கொள்ளும் பொது­மக்கள், பீட்ஸா வேண்டும், செல்போன் ரீசார்ஜ் செய்ய வேண்டும் போன்ற தேவை­களைக் கேட்­ப­தாக பொலிஸார் கவலை தெரி­வித்­துள்­ளனர்.

தினமும் சரா­ச­ரி­யாக 200க்கும் மேற்­பட்ட தொலை­பேசி அழைப்­புகள் வரு­வ­தா­கவும், அதில் 80 சத­வீ­தத்­தினர் பீட்ஸா போன்ற உண­வுகள் கேட்டும், செல்போன் ரீசார்ஜ் செய்­யக்­கோ­ரியும் உத­விகள் கேட்­ப­தாக டெல்லி ரயில்வே பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

வைப்பகப்படம்

இது குறித்து பொலிஸ் அதி­காரி ஒருவர் கூறு­கையில், “அவ­சர எண்­ணுக்கு அழைக்கும் பலர் எனக்கு பேர்கர் வேண்டும், டீ வேண்டும், ஜூஸ் வேண்டும், தண்ணீர் வேண்­டு­மென கேட்­கி­றார்கள்.

சிலர் செல்போன் ரீசார்ச் செய்ய வேண்­டு­மென கேட்­கி­றார்கள். பொது­மக்­க­ளுக்கு அவ­சர எண் தொடர்­பான விழிப்­பு­ணர்வு இல்லை.

24 மணி நேரமும் பொலிஸார் பணியில் இருந்து அவ­சர தொலை­பேசி அழைப்­பு­க­ளுக்கு பதி­ல­ளித்து வரு­கின்றனர்.

ஆனால் பொது­மக்கள் விழிப்­பு­ணர்வு இல்­லாமல் இருப்­பது பொலி­ஸா­ருக்குத் தொல்­லை­யாக உள்­ளது. சிலர் ரயில் நிலையம் வர கால­தா­மதம் ஆகி­றது என்­பதால் ரயிலை நிறுத்­துங்கள் என்­றுக்­கூட அவ­சர எண்­ணுக்கு அழைத்துச் சொல்­கின்­ற­னர்” என தெரி­வித்­துள்­ளார்.

மேலும் ரயில் பய­ணத்தின் போது சிரமம், குற்றம், கொள்ளை போன்ற அவ­சர தேவைக்கு மட்டுமே அவசர எண்ணை பொதுமக்கள் அழைக்க வேண்டும் எனவும் டெல்லி ரயில்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!