கொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் வீழ்ந்தது! 7 பேர் பலி, வீட்டிலிருந்த மூவர் காயம்

0 29

கொலம்பியாவில் விமானமொன்று, குடியிருப்புப் பகுதியில் வீழ்ந்ததால் 7 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின் தென்கிழக்கு பிராந்தியத்திலுள்ள பொபையன் நகரில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது.

பொபையன் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து 9 பயணிகளுடன் இச்சிறிய ரக விமானம் லொப்ஸ் நகருக்குப் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், விமானம் வீழ்ந்த வீட்டில் இருந்த சிறுவன் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!