ஸாகிர் நாய்க்கை நாடு கடத்துமாறு இந்திய பிரதமர் என்னிடம் கோரவில்லை : மலேஷிய பிரதமர் மஹதிர் மொஹம்மத்

Narendra Modi didn’t ask me to extradite Zakir Naik, says Malaysia PM Mahathir Mohamad

0 866

இந்தியாவில் தேடப்படும்; அன்மீக சொற்பொழிவாளர் ஸாகிர் நாய்க்கை நாடு கடத்துமாறு இந்திய பிரதமர் தன்னிடம் கோரவில்லை என மலேஷிய பிரதமர் மஹதிர் மொஹம்மத் இன்று தெரிவித்துள்ளார்.

‘பி.எவ்.எம். மலேஷியா’ எனும் வானொலிக்கு பிரதமர் மஹந்திர் முஹம்மத்  செவ்வாய்க்கிழமை அளித்த செவ்வியில் ஸாகிர் நாய்க் குறித்த கேள்விக்கு, ரஷ்யாவில் இம்மாத முற்பகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தான் சந்தித்ததாகவும், அப்போது ஸாகிர் நாய்க்கை நாடு கடத்துமாறு அவர் தன்னிடம் கோரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மலேஷியாவில் ஸாகிர் நாய்க் பகிரங்க சொற்பொழிவுகளை நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், சீன இனத்தவர்களை சீனாவுக்கே அனுப்ப வேண்டும் என்பது உட்பட இனவாத கருத்துகளே இதற்குக் காரணம் எனவும் மலேஷிய பிரதமர் மஹதிர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதல் மலேஷியாவில் ஸாகிர் நாய்க் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!