சிவகுருநாதன் கிண்ண வருடாந்த கிரிக்கெட்: ஆனந்தவை வென்றது யாழ். இந்து கல்லூரி; பழைய மாணவர் போட்டியில் முடிவில்லை

0 39

யாழ். இந்து கல்­லூ­ரிக்கும் கொழும்பு ஆனந்த கல்­லூ­ரிக்கும் இடையில் கடந்த வார இறு­தியில் யாழ். சென். ஜோன்ஸ் மைதா­னத்தில் நடை­பெற்ற சிவ­கு­ரு­நாதன் ஞாப­கார்த்த கிண்­ணத்­துக்­கான வரு­டாந்த கிரிக்கெட் போட்­டியில் யாழ். இந்து கல்­லுரி வெற்­றி­பெற்று கிண்­ணத்தைச் சுவீ­க­ரித்­தது.

இரண்டு பாட­சா­லை­க­­ளி­னதும் பழைய மாண­வர்­க­ளுக்கு இடை­யி­லான அர்­ஜுன ரண­துங்க கிண்ண கிரிக்கெட் போட்டி மழை கார­ண­மாக கைவி­டப்­பட்­டதால் முடிவு கிட்­ட­வில்லை. தற்­போதைய மாணவர் அணி­க­ளுக்கு இடை­யி­லான கிரிக்கெட் போட்­டியில் ஆனந்­தவை 4 விக்­கெட்­களால் யாழ். இந்து வெற்­றி­கொண்­டது.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆனந்த கல்­லூரி 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­களை இழந்து 79 ஓட்­டங்­களைப் பெற்­றது. இதில் ரொமெத் சத்­நிது 44 ஓட்­டங்­க­ளையும் தூலென் எதி­ரி­மான்ன 11 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். இந்து பந்­து­வீச்சில், பிரி­யந்தன் 13 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­களை வீழ்த்­தினார்.

பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ். இந்து அணி 17.3 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 80 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது. இந்து துடுப்­பாட்­டத்தில், யோனேஷன் 16 ஓட்­டங்­க­ளையும் கஜந்த், ஷங்­கரன் ஆகியோர் தலா 14 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். ஆனந்த பந்­து­வீச்சில், திசுக்க 12 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார்.

சிறந்த துடுப்­பாட்ட வீரர்: ரொமெத் (ஆனந்த), சிறந்த பந்­து­வீச்­சாளர்: திசுக்க (ஆனந்த), சிறந்த களத்­த­டுப்­பாளர்:எஸ். தனுஸ்டன் (இந்து), சக­ல­துறை வீரர்: கே. கோமைந்தன், ஆட்­ட­நா­யகன்: ரொமெத் சத்­நிது (ஆனந்த).

இதே­வேளை இரண்டு கல்­லூ­ரி­க­ளுக்கும் இடையில் நடை­பெற்ற கூடைப்­பந்­தாட்டப் போட்­டியில் ஆனந்த கல்­லூ­ரியும் விவாதப் போட்­டியில் இந்து கல்­லூ­ரியும் வெற்­றி­பெற்­றன.

பழைய மாணவர் கிரிக்கெட் முடிவு கிட்­ட­வில்லை

யாழ். இந்து கல்­லூரி, கொழும்பு ஆனந்த கல்­லூரி ஆகி­ய­வற்றின் பழைய மாணவர்­க­ளுக்கு இடையில் நடை­பெற்ற அங்­கு­ரார்ப்­பண அர்­ஜுன ரண­துங்க கிண்­ணத்­துக்­கான கிரிக்கெட் போட்­டியில் சீரற்ற கால­நிலை கார­ண­மாக முடிவு கிட்­டா­ததால் இரண்டு அணி­க­ளுக்கும் வெற்றிக் கிண்ணம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது.

அணிக்கு இரு­பது ஓவர்­களைக் கொண்ட இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆனந்த பழைய மாணவர் அணி 5 விக்­கெட்­களை இழந்து 115 ஓட்­டங்­களைப் பெற்­றது. பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ். இந்து பழைய மாண­வர்கள் அணி 4 ஓவர்­களில் 2 விக்­கெட்­களை இழந்து 33 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது மழை குறுக்­கிட்­டதால் ஆட்டம் முடி­வுக்கு வந்­தது.

இதனை அடுத்து அர்­ஜுன ரண­துங்க வெற்றிக் கிண்­ணத்தை இரண்டு அணி­க­ளுக்கும் பகிர்ந்­த­ளிப்­ப­தென போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தீர்மானித்தனர். ஆனந்த பழைய மாணவர்கள் அணியில் அர்ஜுனவின் இளைய சகோதரர் சஞ்சீவ ரணதுங்க, சச்சித்ர சேனாநாயக்க (முன்னாள் தேசிய வீரர்கள்) ஆகியோரும் இடம்பெற்றமை விடேச அம்சமாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!