16 வயதுக்குட்பட்ட பாடசாலைகள் 2ஆம் பிரிவு றக்பி மைலோ கிண்ணத்தை சென். தோமஸ் ப்ரெப் சுவீகரித்தது

0 31

குரு­நாகல் மலி­ய­தேவ மைதா­னத்தில் கடந்த வார இறு­தியில் நடை­பெற்ற 16 வய­துக்­குட்­பட்ட இரண்டாம் பிரிவு பாட­சாலை அணி­க­ளுக்கு இடை­யி­லான மைலோ கிண்ண றக்பி போட்­டியில் கொள்­ளுப்­பிட்டி சென். தோமஸ் ப்ரெப் பாட­சாலை சம்­பி­ய­னா­னது.

40க்கும் மேற்­பட்ட  பாட­சாலை அணிகள் பங்­கு­பற்­றிய இந்த றக்பி போட்­டியின் பிர­தான பிரி­வுக்­கான இறுதிப் போட்­டியில் கேரி கல்­லூ­ரியின் கடும் சவாலை முறி­ய­டித்த சென். தோமஸ் ப்ரெப் பாட­சாலை 5 க்கு 0 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று மைலோ கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.

சென் தோமஸ் ப்ரெப்

 

கோப்­பைக்­கான இறுதிப் போட்­டியில் கொழும்பு அசோக்கா வித்­தி­யா­ல­யத்தை எதிர்­கொண்ட பாணந்­துறை றோயல் கல்­லூரி 10 க்கு 0 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­னது.

பாணந்துறை றோயல்

 

குவ­ளைக்­கான இறுதிப் போட்­டியில் தெஹி­யோ­விட்ட வித்­தி­யா­ல­யத்தை சந்­தித்த நுக­வெல மத்­திய கல்­லூரி 22 க்கு 0 என்ற புள்­ளிகள் கணக்கில் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­னது.

நுகவெல மத்தி

 

கேட­யத்­துக்­கான இறுதிப் போட்­டியில் பண்­டு­வஸ்­நு­வர வித்­தி­யா­ல­யத்தை எதிர்த்­தா­டிய பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயம் 14 க்கு 0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானது.

பன்னிப்பிட்டி தர்மபால

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!