‘ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி எனக்கும் உண்டு’ – அமைச்சர் சஜித்

0 174

                                      (நா.தினுஷா,ஆர்.விதுஷா)

ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி தனக்கும் உண்டு என  அமைச்சர்  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  இன்று (17) காலை நடத்திய   ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மங்கள சமரவீர இல்லத்தில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், மங்கள சமரவீர மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எழுந்துள்ள குழப்ப நிலைக்கு கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பை நடத்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தான்  தெரிவித்ததாக சஜித் பிரேமதாச கூறினார்.அத்துடன் இது தொடர்பான கடிதம் ஒன்றையும் தான்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளித்தாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான சகல தகுதிகளும் தனக்கு உள்ளதாகவும்  அதற்கான மக்கள் ஆணை தனக்கு உள்ளது  என்றும் அவர் கூறினார்.  மேலும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தான் களிமிறங்க வேறு கட்சிகளிடம் அடிபணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!