நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன -ரம்யா பாண்டியன்

0 125

ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய ‘ஜோக்கர்’, சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன்.

 

இவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட்தான் கோலிவூட்டின் ெஹாட் டாப்பிக்.

`ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தவருக்கு,

இந்த போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

இது தொடர்பாக அவர் பேசியபோது, “இந்த போட்டோ ஷூட்டுக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் வரும்னு நான் நினைக்கலை.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பல பேர் மெசேஜ் பண்ணாங்க.

சினிமாவில் இருந்தும் பல பேர் போன் பண்ணி, `போட்டோஸ் நல்லா இருந்துச்சு’னு சொன்னாங்க.

`ஆண் தேவதை’ படத்துக்கப்புறம் சில பட வாய்ப்புகள் வந்துச்சு.

ஆனால், இந்த போட்டோ ஷூட்டுக்கு அப்பறம்தான் நிறைய நல்ல பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருக்கு.

சில படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கு.

படங்கள் மட்டுமில்லாமல் ஒரு வெப் சீரிஸ்லேயும் நடிக்க கேட்டிருக்காங்க.

எல்லாமே இப்போ பேச்சுவார்த்தையில் இருக்கிறதால, இதெல்லாம் என்ன கதை, எந்த டீம்னு என்னால சொல்ல முடியாது.

ஆனால், எல்லாமே பெரிய புராஜெக்ட்டுதான்.

சீக்கிரமே அதிகாரபூர்வ அப்டேட்ஸோடு உங்களை சந்திக்கிறேன்’’ என்றார், ரம்யா பாண்டியன்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!