வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 18 : 1961- ஐ.நா. பொதுச்செயலாளர் டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் விமான விபத்தில் பலியானார்

0 96

1201: லத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது.

1505: கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தை நோக்கிய தனது கடைசிப் பயணத்தில் ஹொண்டுராஸில் தரையிறங்கினார்.

1961 : ஐ.நா. பொதுச்செயலாளர் டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் விமான விபத்தில் பலியானார்

1868 : பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற கனிமத்தைக் கண்டுபிடித்தார்.

1877 : செவ்வாய்க் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

1872: சுவீடன் – நோர்வே நாடுகளின் மன்னராக 2 ஆம் ஒஸ்கார் பதவியேற்றார்.

1906: ஹொங்கொங்கில் சுனாமி மற்றும் சூறாவளியினால் சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.

19011: ரஷ்ய பிரதமர் பீட்டர் ஸ்டோலிபின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

1917 : கிறீஸில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1919: நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

1938;: நியூயோர்க்கையும் கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கும் ‘ஆயிரம் தீவுகள்’ பாலத்தை அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் திறந்துவைத்தார்.

1945: அமெரிக்க படைத் தளபதியான ஜெனரல் டக்ளஸ் மெக் ஆர்தர் தனது படைப்பிரிவு தலைமையகத்தை ஜப்பானின் டோக்கியோ நகருக்கு மாற்றினார்.

1948: ஹைதராபாத் நிஸாமின் படைகளின் சரணடைவை இந்திய இராணுவம் ஏற்றுக்கொண்டது.

1950 : பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட் படுகொலை செய்யப்பட்டார்.

1960: ஐ.நா. மாநாட்டுக்காக கியூபாவின் தலைவராக பிடெல் காஸ்ட்ரோ முதல் தடவையாக நியூயோர்க்குக்குச் சென்றார்.

1961: ஐ.நா. பொதுச்செயலாளரான சுவீடனைச் சேர்ந்த டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் கொங்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியானார்.

1962: புரூண்டி, ஜமைக்கா, ருவண்டா, ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ ஆகிய நாடுகள் ஐ.நாவில் இணைந்தன.

1971 : வியட்நாம் போர்: ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகியன தமது படைகளை திரும்ப அழைக்க முடிவு செய்தன.

1973: பஹாமஸ்,  கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி ஆகியன ஐ.நாவில் இணைந்தன.

1984: ஜோ கிட்டின்ஜர் என்பவர் தனியாக பலூன் மூலம் அத்திலாந்திக் சமுத்திரத்தை கடந்து சாதனை படைத்தார்.

1997: அமெரிக்க ஊடகத்துறை வர்த்தகரான டெட் டேர்னர், ஐ.நாவுக்கு 100 கோடி டொலர்களை அன்பளிப்புச் செய்தார்.

2007: இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகவுள்ளதாக பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் அறிவித்தார்.

2014: பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாகுவதற்கு எதிராக ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தனர்.

2016: பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள விமானப்படைத் தளத்துக்குள் 14 தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலாலும் படையினரின் பதில் தாக்குதலாலும், 14 தீவிரவாதிகள் உட்பட 39 பேர் கொல்லப்பட்டனர்.

2018: நைஜீரியாவில் வெள்ளம் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!