பெற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக அங்கீகரிக்க முடியாது! பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

0 282

                                                                                                                     (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
‘பெற்றிகலோ கெம்பஸ்’  (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலையில் இன்று (17) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு அதிகாரிகள்,பெற்றிகலோ கெம்பஸ் தொடர்பில் மேற்கொண்ட மீளாய்வின் பின்னர் பட்டம் வழங்கும் நிறுவனமாக இதனை ஏற்காதிருக்க முடிவு செய்ததாக குறிப்பிட்டனர். முதலீட்டுச் சபையில் ஒரு பெயரில் பதிவு செய்திருக்கையில் அதனை வேறொரு பெயரில் இயங்க முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!