பிலிப்பைன்ஸில்  லொறி  பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி

0 135

பிலிப்பைன்ஸ் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததால் சிறார்கள் உட்பட 20 பேர் பலியாகினர்.

பிலிப்பைன்ஸின் தென் பிராந்தியத்திலுள்ள திபோலி பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றது.

கடலில் குளிக்க சென்ற ஒரு குழுவினர் லொறி ஒன்றில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அந்த லொறி பள்ளத்தில் வீழ்ந்தது.

இவ்விபத்தில 20 பேர்  உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறார்களும் அடங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக பொலிஸ் அதிகாரி ஜோர்ஜ் தபாயன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!