சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் விடுவிப்பு: சிலாபம் தலைமை பொலிஸ் நிலைய அதிகாரிகள் எண்மர் இடைநிறுத்தம்!

0 51

(ரெ.கிறிஷ்­ணகாந்)

சிலாபம் தலைமைப் பொலிஸ் நிலை­யத்தில் ஊழல் தடுப்புப் பிரிவில் கட­மை­யாற்றிய 8 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் துர்­ந­டத்தை குற்­றச்­சாட்டில் பணி இடை­நீக்கம் செய்­யப்பட்டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

பிராந்­திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிய, உப பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வரும், சார்ஜன்ட் ஒரு­வரும், பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் ஐவரும், கான்ஸ்­டபிள் சாரதி ஒருவர் உள்­ளிட்ட எண்மரே இவ்­வாறு பணி இடை­நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

தமக்குக் கிடைத்த தக­வ­லுக்­க­மைய கடந்த 6 ஆம் திகதி வென்­னப்­புவ பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஹோட்­ட­லொன்றில் சூதாட்­டத்தில் ஈடு­பட்ட சந்­தே­க­ந­பர்கள் சிலர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அதன்­போது, சூதாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த 20 சந்­தேக நபர்­களுள் 9 பேரை மாத்­தி­ரமே பொலிஸார் கைது­செய்­த­துடன் ஏனைய 11 பேரையும் விடு­வித்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

மேலும், சூதாட்ட நிலை­யத்தில் இருந்த பணம் மற்றும் சந்­தே­க­ந­பர்­க­ளிடம் காணப்­பட்ட பணம் என்­ப­வற்றை சட்­ட­வி­ரோ­மான முறையில் பெற்று குறித்த பொலிஸ் அதி­கா­ரிகள் மோச­டியில் ஈடுப்­பட்­ட­தாக தெரி­ய­வந்­தி­ருந்­தது.

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே நாத்­தாண்­டியா பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரினால் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டதன் பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரிகள் எட்டுப் பேரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!