கழுத்துகளில் துப்பாக்கியை வைத்து இருவருக்குக் கொலை அச்சுறுத்தல்; பத்தேகம பிரதேச சபை தவிசாளர் கைது

0 57

(ரெ.கிறிஷ்ணகாந்)

பத்­தே­கம பிர­தேச சபைத் தவி­சாளர் அருண அம­ர­சிறி நாரன்­கொட (58) வது­ரம்ப பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கடந்த 12 ஆம் திகதி இரவு, சந்­தேக நப­ரான பிர­தேச சபைத் தவி­சா­ளரின் வீட்­டுக்கு முன்­பாக அமைந்­துள்ள அவ­ரது சகோ­தரர் வீட்டில் நீராட்­டு­விழா வைபவம் நடைபெற்றுள்ளது.

அதில் கலந்துகொண்டிருந்த நபரொருவருக்கும், தவிசாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

அதன்போது, தவிசாளரின் கட்சி ஆதரவாளர்கள், வைபவத்தில் கலந்துகொண்டிருந்த குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன்போது, தாக்குதலுக்கு இலக்கான நபரின் சகோதரரும் அவ்விடத்துக்கு வந்து தவிசாளருடன் முரண்பட்டதையடுத்து, அந்நபரையும் தவிசாளரும் அவரது ஆதரவாளர்களும் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இருவரின் கழுத்துகளிலும் துப்பாக்கியை (ரிவோல்வர்) வைத்து தவிசாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக வதுரம்ப பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலை பொலிஸாரால் வதுரம்ப பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் சந்தேகநபரான தவிசாளர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை பத்தேகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் உத்தரவாத பிணைகள் இரண்டிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலதிக விசாரணைகளை வதுரம்ப பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!