ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவர வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் மனு

0 72

(ரெ.கிறிஷ்­ணகாந்)

இலங்கை ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னம், பாது­காப்பு அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்ட விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலை ரத்து செய்ய உத்­த­ர­வி­டு­மாறு, நேற்று உயர்­நீ­தி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

வண. தம்­பர அமில தேரர் மற்றும் பேரா­சி­ரியர் சந்­தி­ர­குப்த ஆகி­யோரால் இந்த மனு­தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சு, பாது­காப்பு அமைச்சு உள்­ளிட்ட இரண்டு அமைச்­சுகள் மாத்­தி­ரமே ஜனா­தி­ப­திக்கு உரித்­து­டை­யவை எனவும் 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­துக்­க­மைய, வேறு அமைச்சின் கீழுள்ள நிறு­வ­னத்தை ஜனா­தி­ப­தி­யினால் சுவீ­க­ரிக்க முடி­யாது எனவும் மனு­தா­ரர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

விதான பத்­தி­ரண அசோ­ஸி­யேட்டட் சட்ட உதவி நிறு­வ­னத்தின் ஊடாக இந்த மனு­தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­துடன், இதில் எதிர்­ம­னு­தா­ர­ராக ஜனா­தி­பதி சார்பில் சட்ட மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனவே, ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தை சுவீகரித்தமை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர்நீதிமன்றைக் கோரியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!