45ஆவது தேசிய விளையாட்டு விழா கராத்தே தோ போட்டி: கிழக்கு மாகாண வீரர் பாலுராஜுக்கு காட்டாவில் தங்கப் பதக்கம்

அதிசிறந்த வீரர் திசேரா, அதிசிறந்த வீராங்கனை ஹெட்டிஆராச்சி

0 69

விளை­யாட்­டுத்­துறை அமைச்சும், விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்தித் திணைக்­க­ளமும் இணைந்து ஏற்­பாடு செய்­துள்ள 45ஆவது தேசிய விளை­யாட்டு விழாவை முன்­னிட்டு  பொலன்­ன­றுவை முலுல்லே விஞ்­ஞான பீட உள்­ளக அரங்கில் நடை­பெற்ற கராத்தே தோ போட்­டி­களில் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த சௌந்­த­ரராஜ் பாலுராஜ் தங்கப் பதக்­கதை சுவீ­க­ரித்­துள்ளார்.

சௌந்­த­ரராஜ் பாலுராஜ்

ஆண்­க­ளுக்­கான காட்டா பிரி­வி­லேயே பாலுராஜ் தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். இவர் ஒரு­வரே முழுப் போட்­டி­யிலும் தங்கப் பதக்கம் வென்ற தமிழர் ஆவார்.

இவர் தொடர்ச்­சி­யாக எட்­டா­வது வரு­ட­மாக பதக்கம் (5 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்­கலம்) வென்­றுள்­ள­துடன் இதற்கு முன்னர் மூன்று தட­வைகள் அதி சிறந்த வீர­ரா­கவும் தெரி­வா­கி­யி­ருந்தார்.

அத்­துடன் தெற்­கா­சிய கராத்தே தோ போட்­டி­க­ளிலும் 2014, 2016, 2017இல் தங்கப் பதக்­கங்­களை வென்­றி­ருந்தார்.

இவ் வருட கராத்தே தோ போட்­டி­களில் வட மேல் மாகா­ணத்தைச் சேர்ந்த இருவர் அதி சிறந்த வீர­ரா­கவும் அதி சிறந்த வீராங்­க­னை­யா­கவும் தெரி­வா­கினர்.

ஆண்­க­ளுக்­கான 55 கிலோ கிராம் எடைப் பிரி­வுக்­கான குமிட்டே போட்­டியில் தங்கப் பதக்கம் வென்ற டபிள்யூ. கே. ஆர். திசேரா அதி சிறந்த வீர­ராகத் தெரி­வானார்.

பெண்­க­ளுக்­கான காட்டா பிரிவில் போட்­டி­யிட்டு தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்த வடமேல் மாகா­ணத்தைச் சேர்ந்த எச்.ஏ.எச். ஹெட்­டி­ஆ­ராச்சி என்­ப­வரே அதி சிறந்த வீராங்­க­னை­யாகத் தெரி­வானார்.

இவர் 50 கிலோ கிராம் எடைப் பிரி­வுக்­கான குமிட்டே போட்­டியில் வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

காட்டா மற்றும் கராத்தே தோ ஆகிய இரண்டு பிரி­வு­களில் நடத்­தப்­பட்ட கராத்தே தோ போட்­டி­களில் ஆண்­க­ளுக்­கான அணிகள் நிலையில் வடமேல் மாகாணம் சம்­பி­ய­னா­னது. இரண்டாம் இடத்தை மேல் மாகா­ணமும் மூன்றாம் இடத்தை ஊவா மற்றும் கிழக்கு மாகா­ணங்கள் பெற்­றன.

வெண்­கலப் பதக்கம் வென்ற கிழக்கு மாகாண அணியில் ஷெரொன் சச்சின், எஸ்.ஏ.எஸ். மொஹமத், எஸ். திசோபன் ஆகியோர் இடம்­பெற்­றனர். பெண்­க­ளுக்­கான அணிகள் நிலையில் சம்­பியன் பட்­டதை மேல் மாகா­ணமும் இரண்டாம் இடத்தை தென் மாகா­ணமும் மூன்றாம் இடத்தை மத்­திய மாகா­ணமும்  சப்­ர­க­முவ மாகா­ணமும் பெற்­றன.

விளை­யாட்­டுத்­துறை திணைக்­கள உதவிப் பணிப்­பாளர் திலக் அப்­போன்சோ, பொலன்­ன­றுவை மாவட்ட செய­லக உதவி செய­லாளர் டபிள்யூ. வன­சிங்க ஆகியோர் அதி­தி­க­ளாகக் கலந்­து­கொண்டு பரி­சில்­களை வழங்­கினர். (என்.வீ.ஏ.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!