ஈரானிலிருந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் ஏவப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவிப்பு

0 104

சவூதி அரேபியாவில் எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு ட்ரோன்களும் (ஆளில்லா விமானங்கள்) ஏவுகணைகளும் ஈரானிலிருந்தே ஏவப்பட்டன என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த ட்ரோன்களும் ஏவுகணைகளும் ஏவப்பட்ட ஈரானிலுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என அமெரிகாவின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவூதி அரேபிய அரசுக்குச் சொந்தமான ஆராம்கோ நிறுவனத்தின் இரு எண்ணெய் நிலையங்கள் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்கப்பட்ட எண்ணெய் நிலையமொன்று


இத்தாக்குதல்களால் சவூதி அராபியாவின் எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 58 இலட்சம் பீப்பாய்களால் குறைந்துள்ளது என சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. இது சவூதியின் எண்ணெய் உற்பத்தியில் சுமார் அரைப் பங்காகும்.

இத்தாக்குதல்களுக்கு யேமனின் ஹெளதீ கிளர்ச்சி அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. எனினும், அதை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

இத்தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மைக் பொம்பியோ குற்றம் சுமத்தியிருந்தார். இக்குற்றச்சாட்டை ஈரானிய அரசாங்கம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!