பேஸ்புக் ஊடாகப் பரிமாறப்படும் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களின் உண்மைத்தன்மைகளை ஆய்வு செய்யும் நடவடிக்கை இலங்கையிலும் விஸ்தரிப்பு!

0 275

(ரெ.கிறிஷ்­ணகாந்)

இலங்­கையில் பேஸ்புக் ஊடாக பரி­மா­றப்­படும் செய்­திகள், புகைப்­ப­டங்கள் மற்றும் வீடி­யோக்­களின் உண்­மை­த் தன்மை மற்றும் மேல­திக தக­வல்­களை ஆய்வு செய்யும் (Fact Checking) நோக்கில் பெக்ட் கிரெ­ஸெண்டோ (Fact crescend) நிறு­வனம் இலங்­கை­யிலும் தமது நட­வ­டிக்­கை­களை விஸ்­த­ரித்­துள்­ள­தாக அண்­மையில் பேஸ்புக் நிறு­வ­னத்­தினால் அறி­விக்கப்பட்­டுள்­ளது.

Fact Crescend குழுவினர்

 

சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக பரி­மா­றப்­படும் தமிழ், சிங்­களம் மற்றும் ஆங்­கிலம் ஆகிய மூன்று மொழி­க­ளி­னா­லான தக­வல்கள் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தாகவும், இதன்­போது, ஏதேனும் ஒரு செய்தி பொய்­யா­னது என பெக்ட் கிரெ­ஸெண்டோ நிறு­வ­னத்­தினால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் குறித்த செய்தி பேஸ்­புக்கில் தொடர்ந்தும் பகி­ரப்­ப­டு­வது மட்­டுப்­ப­டுத்­தப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பெக்ட் கிரெ­ஸெண்டோ ஸ்ரீலங்கா நிறு­வ­ன­மா­னது, இந்­தி­யாவை தள­மாகக் கொண்டு இயங்கும் Fact Crescend நிறு­வ­னத்தின் ஒரு பகு­தி­யாகும். இலங்­கையின் பேஸ்புக் கணக்­கு­க­ளுக்­கி­டையில் பரி­மா­றப்­படும் தக­வல்­களின் உண்­மை­த் தன்­மையை துல்­லி­யத்­தன்­மையை மதிப்­பாய்வு செய்யும் நட­வ­டிக்­கை இந்த சுயா­தீ­னக்­கு­ழு­வினால் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அந்­நி­று­வனம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இது தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ள அந்­நி­று­வ­னத்தின் ஆசி­ரியர் குழாம் பிர­தானி ராகுல் நம்­பூரி, இலங்­கையில் எமது சேவை விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­வ­தில் மகிழ்ச்சி­ய­டை­கிறோம். போலி தக­வல்கள் தொடர்­பான உண்­மைத்­தன்­மையை கண்­ட­றி­வ­தற்­காக நாம் பாடு­ப­டுவோம்.

பெக்ட் கிரெ­ஸெண்டோ என்­பது சுயா­தீ­ன­மா­னதும், பக்­கச்­சார்­பற்­ற­து­மான உண்மை ஆய்வு அமைப்­பாகும். இந்­நி­று­வனம் சமூக ஊட­கங்கள் மற்றும் பிர­தான ஊட­கங்கள் மூல­மாக வெளி­யி­டப்­படும் உண்­மைத்­தன்­மையை சரி­பார்ப்­ப­துடன், அதன்­பின்னர் பக்­க­ச்சார்­பற்ற மற்றும் வெளிப்­ப­டை­யாக ஆய்வு செய்து அது குறித்த உண்­மையை உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

கடந்த இந்­திய தேர்­தல்­க­ளின்­போது, திட்­ட­மி­டப்­பட்ட வகையில் போலி செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.அவற்றில் 3000க்கும் மேற்­பட்ட தக­வல்­களின் உண்மைத் தன்மைகளை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தோம் என்றார்.

International Fact Checking Network (IFCN) என்ற சர்­வ­தேச வலை­ய­மைப்­பினால் பெக்ட் கிரெ­ஸெண்டோ நிறு­வனம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. www.srilanka.faclcrescendo.com என்ற இணை­யத்­த­ளத்தின் ஊடாக இத்­த­கைய போலி தக­வல்கள் தொடர்­பான உண்மை கண்­ட­றிதல் ஆய்வு முடி­வு­களை பெற்­றுக்­கொள்ள முடியும் என அந்­நி­று­வனம் தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!