தஜிகிஸ்தானிடம் இலங்கை படுதோல்வி

0 37

ஜோர்தானின் ஸர்க்கா சிட்டியில் அமைந்துள்ள இளவரசர் மொஹமத் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டுக்கான 16 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கால்பந்தாட்ட தகுதிகாண் சுற்றில் குழு ஏயில் இடம்பெறும் இலங்கை தனது இரண்டாவது போட்டியில் படு தோல்வி அடைந்துள்ளது.

தஜிகிஸ்தானுக்கு எதிராக திங்கள் மாலை நடைபெற்ற போட்டியில் 0 க்கு 8 என்ற கோல்கள் அடிப்டிடையில் இலங்கை தோல்வி அடைந்தது.

போட்டியின் ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய தஜிகிஸ்தான் இடைவேளையின்போது 5 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் இலங்கை அணி தடுத்தாடுவதில் குறியாக இருந்தபோதிலும் தஜிகிஸ்தான் மேலும் 3 கோல்களைப் போட்டு அபார வெற்றியீட்டியது.

தஜிகிஸ்தான் சார்பாக எம். சய்தலீவ் (17 நி.), கே. டொய்ரொவ் (22), கே. அப்துல்பட்டோஹி (26 நி., 34 நி., 60 நி., 68 நி.), ஏ. கபிர் (40 நி.), ஏ. பக்ரிதின் (88 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

இன்று நடைபெறவுள்ள போட்டியில் ஜோர்தானை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

இதே குழுவில் இடம்பெறும் குவைத்துக்கும் நேபாளத்துக்கும் இடையிலான போட்டி 1 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!